வன்மை விழி

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பற்றி சில அலசல்கள்.

போன வாரத்தில் எழுதியிருந்த முக்கிய கட்சிகள் பற்றி இன்று பேசப் போவதில்லை.மாறாக மாற்றத்தை பற்றி பேசப் போகிறேன்.இளைஞர்கள் தான் அந்த மாற்றம் என்பதை என்றாவது நீங்கள் உணர்ந்ததுண்டா?இளைஞர்கள் என்றால் எப்பொழுதும் ஊர் சுற்றிக்கொண்டு,வீனாக செலவு செய்து ஊதாரித்தனம் செய்பவன் தானே என்று ஏளனமாக என்னும் உங்கள் பிம்பத்தை உடைத்தார்களே!அதுவும் வீதி வரை வந்து போராடி உடைத்தார்களே அவர்கள் தான் அந்த மாற்றம் என்று உங்களுக்கு தோன்றாமல் போனதன் காரணம் என்னவோ?

ஆறில் வளையாதது அறுபதில் வளையாது 

இளங்கன்று பயமறியாது 

என்பதெல்லாம் அப்பொழுதே எழுதப்பட்ட ஒன்று.இளைஞர்களை கட்டிப் போட்டு வேடிக்கை பார்க்கும் பெற்றோர்களுக்கு என்ன தெரியும் அவர்களின் வேகமும் விவேகமும்.இதையும் மீறி என்ன சொல்லப் போகிறீர்கள் அவர்கள் சோம்பேரிகள் அனுபவம் இல்லை என்று தானே,உங்களின் அனுபவ அரசியல் ஊர் எங்கும் கிழிக்கப்பட்டதே அதை பற்றி யார் பேசுவது.சென்னையில் மழைத் தண்ணீரை ஜே.சி.பி யில் அள்ளியது,ஸ்டிக்கர் ஒட்டியது,துயரத்தில் இருந்த சென்னை மக்களிடையே பேனர் ஒட்டியது,2ஜி,சொத்து குவிப்பு,மனல் கொள்ளை,பனம் கொடுத்து ஓட்டு வாங்குவது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

வீதிக்கு போய் போராட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள் அரசியல்வாதிகள் என்றால் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட இந்த இளைஞர்கள் யார்?

மீண்டும் எழுதுவேன்,

வன்மை விழி

தமிழக அரசியலில் என்னதான் நடக்கிறது?

     முதலில் அண்ணா எம்.ஜி.ஆர் என்று நல்ல மனிதர்களால் உருவாக்கப்பட்ட திராவிட கட்சிகள் தற்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்துவிட்டு தங்களுக்குள் சண்டையிட்டு உடைந்துகிடக்கிறது.

     சராசரியாக ரேஷன் கடைகளை நம்பி இருக்கும் மக்களுக்கு அரோகரா என்பது தான் அந்த அரசின் பதிலாக மாறியது.மக்களின் பிரச்சனை என்னவென்றே தெறியாத ஒரு அரசை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.சுமார் 1991ல் இருந்து வடிவமைக்கப்பட்டு வெடித்து வரும் மீத்தேன் பிரச்சனை,கடந்த ஆட்சியே மேல் என்று எண்ணும் அளவுக்கு விலைவாசி உயர்வு,எத்தனை வருடமானாலும் மாறாத இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தின் அவலம்,வேலையின்மை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

    இவ்வளவு வலிகளுக்கு இடையில் சசிகலா சிறை சென்றதற்கு அரசு அழுகுறல்.உப்பதிண்ணவன் தண்ணி குடிச்சுதான் ஆகனும் என்பது பழமொழி.இப்படி ஒரு கூத்து இங்குதான் என்றாலும் இன்னொரு கூத்து ஆர்.கே.நகர் தேர்தல் தினகரன் யார் என்பதே எனக்கு சமீபத்தில்தான் தெரியும்,அவர் அ.தி.மு.க வேட்பாளர்.பாவம் கங்கை அமரன் அவர் இத்தோடு அவ்வளவுதான் ஏனென்றால் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார்.இவர்களின் சண்டைக்கு இடையில் தீபா வேறு இருக்கிறார்.தீபா வீட்டிற்குள்ளே இரண்டு கட்சி,குழப்பமான பேச்சு என்று எதுவுமே தெளிவில்லாத இவர் மக்களை எப்படி தெளிவாக வழிநடத்த போகிறார் என்பது சந்தேகமே.தி.மு.கா மருதகணேஷ் போட்டியிடுகிறார்.யார் வந்தாலும் ஆபத்து எங்களுக்குதான்,பணம் மூட்டை மூட்டையாக வேண்டும் என்பது அரசியலின் முதல் கொள்கை.

  என்னதான் அந்த முறை அதிக பொழுதுபோக்கு அரசியல்வாதிகளால்தான் என்றாலும் அவதிப்படுவது நாம்தான்.இன்னும் நான்கு வருடங்களுக்கு இதே நிலைதான்.பொருத்திருந்து ஆராய்வோம் இந்த ஆர்.கே.நகர் முடிவை,

வேறென்ன வேண்டும்

விழியோரம் உன் கனவுகளை சுமக்கிறேன்,

பிரிந்து செல்ல நினைத்தாயோ பாவம் என்ன செய்தேன்!

என் காதல் என்றும் ஈரமே,

மழலையாய் அழச் செய்தாயே பாவம் என்ன செய்தேன்!

பகல் கனவு பலிக்கலையோ பழியாகிறேன்,

நினைக்கக்கூட நேரம் இல்லையோ பாவம் என்ன செய்தேன்!

கடவுளின் கணக்கோ உன்னோடு ஒட்டலையே,

பந்தையமில்லா வாழ்க்கையில் தோற்க பாவம் என்ன செய்தேன்!

நீ மனதாற நகையாடி வருகையிலே,

விழுந்த விதை மரமாய் என்னை காண!

விழிநீர் வழிய நினைப்பாயோ?

பாவம் என்ன செய்தேனென்று.

குட்டி பையன்

  ஒரு குறுகிய சாலையில் வேகமாக சைக்கிள் ஓட்டி வருகிறான் சிவா.சிவா ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன்.அவன் அப்பா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்புக்கு ஆசிரியராக பணியாற்றுகிறார்.ஆனால் ஒரு அரசு ஆசிரியராக இருந்தும் தனது மகனை அதே ஊரான கோவையின் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்.

   அம்மா வாசலில் நின்றுகொண்டிருக்க,வீட்டிற்கு வந்தான் சிவா.தனது நீல நிற பள்ளி சீருடை அழுக்குபட்ட நிலையில்,சைக்கிள் கோடு விழுந்த வடிவில் தலை குணிந்து வந்த அவனை அம்மா பார்த்து நிலமையை புரிந்து கொண்டாள்.

    ஏன் சாமி என்ன இப்புடி வந்திருக்க கீழ விழுந்திட்டயா?

   அம்மா என்று வார்த்தைகளை விழுங்கினான்.

    சாமி எதாவது பிரச்சனையா?

    அதெல்லாம் இல்லை மா,நான் ஒரு கார்ல முட்டிட்டேன்.அவன் காசு கேக்குறான்.

     என்ன சாமி சொல்ற உனக்கு ஒன்னும் ஆகலைல?எவ்ளோ கேட்டாங்க?

     பத்தாயிரம் மா.

     சமயல் அறைக்கு சென்று சில ஜாடிகளைத் திறந்து பணத்தை சேர்த்து,டேய்என்கிட்ட அவ்ளோ இல்லை.ஆனா ஒரு ஐயாயிரத்தி நானூறு இருக்கு.இந்தா  குடுத்திடு அப்பாகிட்ட சொல்லிடாதே!

    சிவா பணத்தை வாங்கி கொண்டு பிரச்சனையை கையில் காலில் விழுந்து முடித்தான்.முடித்தவுடன் வெளியே தனது நண்பன் ராஜிடம்,

அம்மா பணம் வைக்குற ஜாடியை கண்டுபுடிச்சிட்டேன் டா,இனி தினமும் பத்து ரூபா திருடி குச்சி ஐஸ் சாப்பிடலாம் என்று கண்ணீரைத்  துடைத்தவாறு கூறினான்.

   

நம்பிக்கை

விழித்ததும் வெண்ணிலா நீ உண்டெனில்,

இழப்பதற்கு அழுது என்ன பயன்.

உயிரில்லை ஆனால் உடன் நீயுண்டெனில்,

உழைப்பதற்கு அஞ்சி என்ன பயன்.

தோல்வி வென்றால் தோழனாய் நீயுண்டெனில்,

வெற்றிகாண வேரற்றால் என்ன பயன்.

உழப்பை விதைபோடு,

பலனை எண்ணாது,

வெற்றி என்னும் சூரியன் உதிக்கட்டும்,

வாழ்க்கையே அறுபடையாகட்டும்.

நேசிக்க மறக்காதே!

ஆதித்யன் தனது பொரியியல் படிப்பை முடித்துவிட்டு நான்கு ஆண்டுகள் கழித்து வீடு திரும்புகிறான்.சுமாரான நிறம்,படிப்பு,உயரம் என்று சாதாரன வாழ்க்கை மனிதன்தான் இந்த ஆதி.சுமாரான இவனக்கு வேலையும் கிடைக்கவில்லை.இவன் வீட்டுக்கு ஒரே பையன் என்பதால் நீங்கள் எதிர்பார்ப்பது போல் செல்லமாக வளர்க்கப்படவில்லை மாறாக கண்டிப்புடன் வளர்க்கப்பட்டான்.இவனுக்கு ஒரு ஓவியனாக  வேண்டும் என்பது இலட்சியமாக இருந்தது.ஆனால் இலட்சியம் கனவாக மாற்றப்பட்டது.

     காலையில் சுப்பிரபாதம் கேட்பதுபோல் இவன் தந்தையின் திட்டு காதில் விழும்,டேய் அந்த வேலை செஞ்சியா இந்த வேலை செஞ்சியா என்று நெருப்பாய்  விழும்.அவன் தந்தையிடம் இல்லை என்ற பதிலுக்கு அரை மணி நேரம் டிரௌசர் கிழிந்துவிடும்.

     இவனுக்கு சொத்து சேர்த்து இவனை சோம்பேரியாக்கி ஆசையை முடக்கிவிடுகிறார் இவன் தந்தை.கைகள்,கால்கள் இருந்தும் மனதளவில் ஊணமானான் ஆதி.தனக்காக தானாக உழைத்துச் சேர்த்தது எதுவுமில்லை என்பதை புரிந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து சொந்த காலில் நிற்க துணிகிறான் ஆதி.யார் அழைத்தும் போகக் கூடாது என்று உறுதியாய் இருந்து வாழ்க்கையில் நியாயமாக முன்னேறுகிறான்.

   ஒருநாள் வாழ்க்கை இவனை சக்கரம் போல் சுழற்றியதை நினைத்துக் கொண்டான்.இருண்டு போன அவனுக்கு துணையாய் நின்றது சில புத்தகங்களும்,அவன் விரும்பிய இயல் இசை நாடகமும்தான் என்பதை உணர்ந்தான்.அதில் பதினாறு வருடம் தன் மக்களின் சாவின் நீதிக்கு போராடிய சன் சர்மிலா அவர்களின் புத்தகம் மிக முக்கியமானது.இன்று அவன் கார் வீடு என்று இருந்தாலும் தனது தந்தை மற்றும் தாயையும் வந்த நிலையையும் மறவாதவனாய் இருக்கிறான்.

    அவன் இறுதியாக தனது எழுபத்திரண்டு வயதில் ஒரு ஓவியம் வரைகிறான் அதில் அவனின் தந்தையும் தாயும் இவன் பிறந்தவுடன் ஆனந்தமாய் கண்ணீரிடும் உணர்ச்சி வரையப்பட்டது.

    ஆதியின் நம்பிக்கியான வாழ்க்கையும்,அவனின் குடும்பத்தின்மேல் வைத்திருந்த காதலையும் உணர்ந்த அவன் மகள் கவிதா தனது மகனிற்கு ஆதித்யன் என்று பெயரிட்டாள்.

வெள்ளை மனதே!

ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை,

அவள் போனாள் 

அதை இழந்தேன் 

வாழ்வில் தோற்றேன்

என்றோர் கோழை மடையன்!

ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை,

இலக்கை எண்ணி

அடையும்வரை எண்ணி

சாவிற்குள் சாதிப்பேன்

என்போர் வாழச்சிறந்தோன்!

மழலை (முடிவுப் பகுதி)

Untitled-1

பயந்து போன சந்திரு ரவியின் துணையோடு கோகுலைத் தேடத்  துவங்கினார்கள்.அவன் விளையாட சென்ற இடம்,பள்ளிக்கூடம்,நொறுக்கு தீனி உண்ணும் இடம்,நண்பர்களின் வீடு என்று அனைத்து இடங்களில் தேடியும் இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கண்கிளில் இருந்து தனது கனவை திருடியது போல உணர்ந்த சந்திரு,அண்ணா எனக்கு என்னமோ பயமா இருக்குணா என்று வேதனையில் அழத் துவங்கினான்.ரவியும் பயந்து போக,எங்கிருந்தோ ஒரு தைரியத்தை திரட்டி காவல் நிலையத்திற்கு விரைந்தனர்.

(முதல் பகுதியின் தொடர்ச்சி)

ரவி ஒன்னும் ஆகாது என்று சமாதானம் சொல்ல அதை சந்திரு ஏற்பதாகத்  தெரியவில்லை.அங்கு விரைந்தவர்களுக்கு காத்திருந்தது இன்னொரு அதிர்ச்சி.காவல் நிலையத்தின் எழுத்தர் இன்ஸ்பெக்டரை போனில் தொடர்பு கொண்டு,சார் அதே ஏரியால இருந்து இங்க ஒருத்தர் வந்திருக்காரு என்று தயங்க, அதான்யா போயிட்டு இருக்கேன் என்று பதில் சொன்னார் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்.சார் அது இல்லைங்க இங்க அவரோட பையன காணோம்னு சொல்றாங்க என்று ஒரு முடிச்சு போட்டார்.

வெங்கடேஷ் பார்ப்பதற்கு வாட்டம் சாட்டமாக இருப்பார்.மிகவும் துணிவான ஒரு அதிகாரி.அவரின் போலீஸ் மூளை வேலை செய்யத்  துவங்கியது.

அவுங்க வீட்டு அட்ரெஸ்,பேரு எல்லாம் வாங்கிக்கோ.முடிச்சிட்டு சீக்கிரமா ஹௌசிங் ஏரியாகே வர சொல்லு என்று தனது வழக்கமான அதட்டல் நிறைந்த கம்பீரமான குரலில் சொன்னார்.

மாலை 6.20 மணிக்கு
மழை கணிசமாகக் குறைந்திருந்தது.

மகேஷின் வீட்டு அழைப்புமணி பாடியது “ஓம் ஓம் புவஷ்பவ”.இரண்டு மாடி கட்டிடம் என்பதால் இறங்கி வர சில நேரம் ஆனது மகேஷுக்கு.கதவை திறந்தால் மூன்று போலீஸ்காரர்கள்,இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்,கான்ஸ்டபில் கணேஷ் மற்றும் திலீப் வெறுப்போடும் கடுப்போடும் மழையின் சாரலில் நினைந்தபடியே நின்றிருந்தார்கள்.துணை காவலர்கள் இருவரும் அளவான உயிரமும் கருநிற மேனியும் கொண்ட மொரடனாக இருந்தார்கள்.

ரெயின் கோட்டை அணிந்திருந்த காவலர்களில் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்,
மகேஷ் நீ தானப்பா?என்ன ஆச்சு?என்று பந்தாவாக கேட்க,

சார் உள்ள வாங்க என்று பவ்வியமாய் அழைத்தான் மகேஷ்.

சொல்லுங்க மகேஷ்,எங்க சத்தம் கேட்டுது,எப்போ? என்று வினாவினார்.

சார்,ஒரு அஞ்சு மணி இருக்கும்.தெக்க எங்கயோ பக்கத்துல ஒரு துப்பாக்கி சத்தம் கேட்டுது.என்ன பண்றதுனு தெரில கொஞ்சம் பயமா இருந்திச்சு சார்.

உங்க வீட்ல எத்தன பேரு?

நான்,என் wife,அம்மா,அப்பா,வேலை செயுரவுங்க ரெண்டு பேரு சார்.

நீங்க என்ன பண்றீங்க?

நான் சோழமண்டலம் இன்சூரன்ஸ் கம்பனில H.Rஆ இருக்கேன் சார்.

நான் பாத்திட்டு வந்து மறுபடியும் உங்ககிட்ட பேசுறேன்.

அக்கம் பக்கத்துலயும் விசாரிங்க என்று இரண்டு காவலர்களை அனுப்பிவிட்டு வெளியில் நடந்து வந்தார் வெங்கடேஷ்.காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு அந்த ஆள் வந்தான்லே அவன் அட்ரெஸ மெசேஜ் பண்ணு சீக்கிரம்யா என்று அதட்டினார்.

ரவியும் சந்திருவும் கரு நிற ஸ்ப்ளண்டர் வண்டியில் வந்து இறங்கினார்கள்.

வெங்கடேஷ் சந்திரு வீட்டை நோக்கி நடந்தார்.அங்கிருந்து சிறிது தூரம் இருக்கும் அந்த வீடு என்பதை அவர் அறிந்தவரே.

சந்திரு நீங்கதானே?

ஆமா சார்.என் பயன்தான் காணாம போனது என்று கண்ணை கசக்கினார்.

எப்போ வீட்ல இருந்து போனான்?

எந்த கிரௌண்ட்?எங்க இருக்கு?

என்ன கலர் சட்டை,திரௌசெர்?

உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம்? என்று கேள்விகளில் சதகம் உண்டு செய்தார்.

சிறு மௌன யோசனைக்குப் பிறகு,சார் சந்தேகம்னு யாரும் இல்லை என்றான் சந்திரு.

எத்தனை மணிக்கு உங்க பையன் வீட்டுக்கு வந்தான் ரவி? என்று கேட்டு,வாசலில் இருந்து இரண்டு காவலர்களும் உள்ளே வந்தார்கள்.

வெங்கடேஷ் எழுந்து தனியாக சென்று,

என்னயா ஆச்சு? என்று விசாரித்தார்.

சார் அங்க துப்பாக்கி சத்தம் கேட்டது உண்மைதான்னு பக்கத்துல இருக்குற மூணு வீட்லயும் சொன்னாங்க.

அப்போ அங்க எதாவது கத்துற சத்தம்,வேற எதாவது கேட்டுச்சானு கேட்டாங்களா?

அதெல்லாம் எதுவும் கேக்கலைன்னு சொன்னங்க சார்.

சரி இங்க லோக்கல் ரவுடி ரெக்கார்ட்ஸ்,ரிட்டையர்ட் போலீஸ் அந்த மாதிரி எதாவது இருக்கங்கலானு விசாரிங்க.

சரிங்க சார் நாங்க போறோம்.

ஏற்கனவே மணி எட்டு ஆச்சு,இருந்தாலும் நான் விசாரிக்க சொல்லிருக்கேன்.

நானும் போறேன்,நீங்க ஒன்னும் பயப்படதீங்க.நாங்க பாத்துக்குறோம் என்று வழக்கமான வாக்கியத்தை கூறி தன் குடியிருப்புக்கு சென்றார் வெங்கடேஷ்.

ஒரு மணி நேரம் கழித்து வெங்கடேசின் அலைபேசி ஒலித்தது.சொல்லுயா என்றார்
“சார் இங்க ரிட்டையைர்ட் மிலிடரி காரன் ஆனந்த்னு ஒருத்தன் இருக்கான்.எப்போ பாத்தாலும் குடிச்சிக்கிட்டே தான் இருப்பானாம்.”

சரி,இதுவரைக்கும் துப்பாக்கி எதாச்சும் பார்த்தாங்களா அவன்கிட்ட?

சார் அவன் வீட்டுக்கு உள்ளேயே யாரையும் விட மாட்டானாமா,சரியான சைக்கோனு பேசிக்குறாங்க சார்.

யோவ் அதுக்கு அர்த்தம் தெரியுமாயா அவனுகளுக்கு?லூசுப் பயலுக.

வேற என்னையா?

அந்த பையன் ஒரு தடவை “ball” உள்ள விழுந்திருச்சுன்னு அந்த ஆனந்த்
வீட்டு செவுரு எட்டி குதிச்சிருக்கன் சார்.அப்போ அந்த பையன அவன் இரும்பு பைப்ல அடிச்சிட்டாத சொல்றாங்க சார்.

இதை யாருயா சொன்னா?என்று தனது காரை ஸ்டார்ட் செய்தார் வெங்கடேஷ்.

அவன்கூட படிக்குற பையன் சார்.

சரி,நீ அவன் வீட்ட வாட்ச் பண்ணு நான் வந்துட்டே இருக்கேன் என்று அழைப்பை துண்டித்தான்.

சார்,ஒரு கருப்பு கலர் போலோ கார் உள்ள போகுது சார்.

இருயா வந்திடறேன்.ஆமா அவன் வீடு எங்க இருக்குனு சொன்ன?

சார் நம்ம முதல்ல போனோம்ல அவுங்க வீட்டுக்கு பின்னாடி நாலாவது வீடு சார்.

ம்ம்ம்.பக்கத்துல எதாவது கிரௌண்ட் இருக்கா?

ஆமா சார் ஒரு சின்ன கிரௌண்ட்.

சரி அவன கவனமா  வாட்ச் பண்ணு,நான் ஒரு 15 மினிட்ஸ்ல வந்திடறேன்.

கார் ஓட்டியபடியே விசாரணையில் கிடைத்த புள்ளிகளை கோர்க்க முயற்சி செய்தான்.
“அஞ்சு மணிக்கு கன் ஷாட்”
“கிட்ட தட்ட அதே டைம்ல ரவி பையன் வீட்டுக்கு போயிருக்கான்”
“அதே கிரௌண்ட்”
“அல்ரெடி ஒரு ப்ராப்லம் இருக்கு”
“அந்த பையன கொன்றுக்கணும்”
“பொணத்த எங்க மறைச்சி வைக்குரதுன்னு தெரியாம எங்கயோ  போய்ட்டு வந்திருக்கான்”
“அவன் தான்” என்று நினைக்கே வந்தது அந்த மைதானம்.

தெருவின் ரோட்டை ஒட்டிய மைதானம் என்பதால் தெரு விளக்கு வெளிச்சம் ஓரளவு தெரிந்தது.
ஸ்டம்ப் குத்திய இடமும்,ஷு தாரைகளும் நன்றாக தெரிந்தது.
அவரால் எந்த இடத்தில் விளையாடினார்கள் என்பதை யூகிக்க முடிந்ததது.

ரோட்டைக் கடந்தால் ஒரு பெரிய சுவர் இருந்தது.இதுதான் அவனின் வீட்டின் பின்புறமாக இருக்க வேண்டும் என்பதை யூகித்து விட்டார்.அந்த சுவரின் அகலம் சுமார் எண்பது அடி இருக்கும்.உயரம் சுமார் இருபது அடி இருக்கும்.மழையின் சேற்றில் அச்சிறுவனின் ஷு அச்சைத் தேடி அலைந்தார் வெங்கடேஷ்.அந்த எண்பது அடி சுவறு முடியும் ஒரு இடத்தில் உயரமுள்ள கல் போடப்பட்டிருந்ததை கவனித்தார்.அந்த கல்லில் ஏறி நின்று குதிக்க முடியுமா என்று கணித்தார்.அதன் அருகே தனது அலைபேசியின் டார்ச் லைட்டை அடித்தார்.ஆங்கங்கே இருந்த சேறுகளில் தென்பட்டது அதே அச்சு.

அதை ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு காரில் ஏறி கிளம்பிவிட்டார்.தனது உயர் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவிக்க,நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இரண்டில் ஒரு காவலர்களையும் அழைத்து,
யோவ் திலீப்,ஸ்டேஷன் போய் வாரென்ட் faxல வந்திருக்கும் வாங்கிட்டு,அந்த பைத்தியகாரன் வீட்டுக்கு வந்திரு.நான் இப்போ அஞ்சு நிமிஷத்துல வந்திட்றேன் கணேஷ அங்கயே இருக்க சொல்லு.

மீண்டும் சிந்தனை துவங்கியது வெங்கடேசுக்கு,
இங்க இருந்து சுத்து வட்டாரத்துல ரெண்டு குளம்,ஒரு டேம் இருக்கு.அதோட யாருமே அதிகமா நடமாடாத இடம் அப்புடினா? ஒரே இடம் மட்டும் தான் இருக்கு.
ஒரு வேலை அவன் வீட்லயே புதைச்சிருந்தா?
இருக்காது அப்படி இருந்தா,கார் ஏன் அந்த நேரத்துல வெளிய போய்ட்டு வருது?
Heartless bastard.என்ன பன்னுனான்னே தெரியலயே?என்று சந்தேகத்தை எண்ணிய நொடிகளில் இடம் சேர்ந்தார் வெங்கடேஷ்.

ஒரு பல்சர் பைக்கை வெளிச்சம் படாத இருட்டில் நிறுத்திவிட்டு தானும் நின்றிருந்தான் கணேஷ்.

யோவ் என்னைய மொபைல் நோண்டிட்டு இருக்க,இது சீரியஸான விஷயம்.

சாரி சார்.

சரி,எதாவது ஆள் நடமாட்டம் இருந்திச்சா?

அதெல்லாம் ஒன்னும் இல்லை சார்,ஒரே ஆள் தான்.அப்பப்போ வெளில வந்து பாத்திட்டு போறான்.

யோவ் என்னையா சொல்றே,உன்னை பாத்துட்டானா?

இல்லை சார் என்று தலைகுணிய,ஒரு ஆட்டோவின் சத்தம் கேட்டு இருவரும் யாராக இருப்பார்கள்  என்ற துடிப்பில் கூர்மையான கண்களால் சாலையை பார்த்தார்கள்,ஆனால் பயப்படும்படி எதுவும் இல்லாமல் வந்தான் திலீப்.

மூவரும் ஆனதின் வீட்டினுள்ளே சென்றார்கள்.அங்கு நின்றுகொண்டிருந்த கருப்பு போலோ காரை நோட்டமிட்டார் வெங்கடேஷ்.மழையில் நினையாமல் பளிச்சென்று இருந்தது அந்த போலோ கார்.

கார் மழை நின்ற பிறகு தான் சென்றிருக்கிறது என்பதை அறிந்துகொண்டார்  வெங்கடேஷ்.

கதவருகே இருந்த அழைப்பு மணியை அடித்தான் திலீப்.அருகில் இருந்த ஜன்னலில் இருந்து பார்த்து விட்டு வருகிறேன் என்று சைகை காண்பித்துவிட்டு,ஒரு சிறிய நேரம் கழித்து திறந்தது அந்த கதவு.

அவன் கையில் இருந்த அந்த துப்பாக்கியை கவனித்தார் வெங்கடேஷ்.

Down,down… என்று சத்தமிட,ஆனந்தின் ஒரு புல்லெட் திலீப்பின் கையில் பாய்ந்தது.

மறுமுனையில் வெங்கடேஷின் தோட்டா அவனின் துப்பாக்கி பிடித்திருக்கும் உள்ளங்கையை நோக்கி பாய்ந்தது.

அவன் என் தனிமையை கெடுத்ததாகவும்,உளவு பார்த்ததாகவும்,என் மனநிலையை சொதித்ததால் ஆத்திரமாடைந்த தான் அவனை சுட்டதாகவும் வாக்குமூலம் அழித்தான் ஆனந்த்.

அடுத்த நாள் காலையில்,ஒரு விளையாட்டு பூங்காவில் கோகுலின் உடல் கண்டெடுக்கப்பட்டது.அந்த மழலை சிறுவனின் கால்களிலும் மார்பிலும் தோட்டாக்கள் கண்டறியப்பட்டது.அதை கண்ட கோகுலின் பெற்றோர்கள் கதறி அழுதார்கள்.உடனிருந்த அனைவரின் இதயமும் கனத்தது.கண்ணனின் கண்களில் கோகுலின் கடைசி தருணம் வந்து வந்து போனது.

மழலை(முதல் பகுதி)

Untitled-1

மாலை 4.35 மணி
100/4,ஹௌசிங் பகுதி,உடுமலை.
மழை வர்ற மாதிரி இருக்கு,துணி எல்லாம் எடுத்து உள்ள வை என்றான் சந்திரு.
ஆமாங்க மழை கொட்ட போகுது என்று சடைந்துகொண்டு துணிகளை எடுக்கச் சென்றாள் மல்லிகா.

மாலை 4.40 மணி
ஹௌசிங் பகுதியின் மையம்,
மைதானத்தில்,
டேய் மழை வர்ற மாதிரி இருக்கு என்று கண் சிமிட்டிக்கொண்டே வானைப் பார்த்து சீக்கிரமா பந்த வீசு என்றான் கண்ணன்.
கோகுல் பந்து வீச தனது வலது கையை ஓங்கினான்.

மழை தூற ஆரம்பித்தது,

மாலை 4.45 மணி
13/1,ஹௌசிங் பகுதி
புதிதாக கல்யானமான மகேஷ்,வேலையை முடித்து விட்டு நீச்சல் குளத்தில் குளித்தவாறு நினைந்தபடியே வீட்டுக்கு வந்தான்.பாசமான மனைவி அருணா என்ன மகேஷ் இவ்ளோ வொர்க் ஆ என்று கிண்டலடித்து தலையைத் துவட்டினாள்.

மாலை 4.50 மணி
14/1,ஹௌசிங் பகுதி,உடுமலை
தாத்தா. நியூஸ் சேனலை மாற்றி பார்த்துக்கொண்டிருக்கிறார்.பாட்டி காபி கொண்டு வந்து கையில் தர.ஒரு திருப்தியான புன்னகையுடன் வாங்கி பருகுகிறார்.

மழைக்காக மேகம் சூழ்ந்து இருளத் துவங்கியது.மெல்ல பெய்த மழை,ஊத்தத் துவங்கியது.

மாலை 5 மணி

திடீரென ஒரு துப்பாக்கி சத்தம் அந்த ஹௌசிங் ஏரியாவில் கேட்டது.
அருகில் இருந்த சில வீடுகளுக்கே அந்த சத்தம் கேட்டது.

மிரண்டுபோன அந்த புதுமண தம்பதி பத்து பதினைந்து நிமிடத்தின் வெடவெடப்பில் ஒரு முடிவுக்கு வந்தது.
மழை ஊத்த துவங்கியது.

ஹலோ சார் நான் ஹௌசிங் ஏரியால இருந்து மகேஷ் பேசுறேங்க,இங்க துப்பாக்கி சத்தம் கேட்டிச்சு.ஆமா சார்,ஹௌசிங் தான்.
இப்போதான் சார் ஒரு 10 நிமிஷம் இருக்கும்.
மகேஷ்,மகேஷ் சார் 13/1.
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஓ.கே சார் என்று போனை குழப்பம் கலந்த பயத்துடன் துண்டித்தான்.

மாலை 5.30க்கு
என்னங்க,மழை வேற பெய்யுது.
பையன காணோம்,என்னனு பாருங்களேன் என்று பயத்துடன் கண்ணில் கண்ணீர் நிற்க கேட்டுக்கொண்டாள் மல்லிகா.
டீ குடிப்பதை நிறுத்திவிட்டு மல்லிகாவை முறைத்தவாறு,நீ பயப்படாமே இரு,எங்க போயர போறான் ரவி அண்ணன் வீட்லதான் இருப்பான்.நான் போய் பாக்குறேன் என்று குடையை விரித்து கோபமாய் கிளம்பினார் சந்திரு.

ரவி அண்ணா,தம்பி இருக்கானா?

டேய்,டேய்,சந்திரு வந்திருக்கார் பாரு.
ஏம்மா காபி கொண்டு வா.

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்னா.

உள்ளே இருந்து கிரிக்கெட் விளையாடுவது போல கையை அசைத்துக்கொண்டு வேகமாய் ஓடி வந்தான் பாண்டி.பாண்டியை பார்த்த உடன் உள்ளே ஒரு கலக்கம் ஏற்பட்டது சந்திருவுக்கு.கோகுல் எங்க வீட்டுக்கே வர்லே என்று புழுகினான் கண்ணன்.

எங்கப்பா போனான் அவன்.

தெரிலீங்க என முழித்தான்.

ரவி,டேய் மரியாதையா சொல்லிரு இல்லை என்று கை ஓங்கினார்.
அழுதுகொண்டே அந்த பத்து வயது சிறுவன்,
அவனும் நானும் கிரௌண்டில கிரிக்கெட் விளையாடிக்கிட்டிருந்தோம்,மழை வர்ற மாதிரி இருந்திச்சு அப்பா திட்டுவாங்கனு சொல்லிடு நான் வந்துட்டேன்.

அவன் இன்னும் வரலையே கண்ணா என்று சந்திரு வருத்தப்பட்டார்.
அவன் ஸ்டெம்ப் பேட் எல்லாம் எடுத்திட்டு போறேன்னு சொன்னான்.நான் முன்னாடியே வந்துட்டேன்.எனக்கு ஒன்னும் தெரியாது என்று அழுது ஓவர் ஆக்டிங் செய்தான்.

பயந்து போன சந்திரு ரவியின் துணையோடு கோகுலைத் தேடத் துவங்கினார்கள்.அவன் விளையாட சென்ற இடம்,பள்ளிக்கூடம்,நொறுக்கு தீனி உண்ணும் இடம்,நண்பர்களின் வீடு என்று அனைத்து இடங்களில் தேடியும் இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கண்கிளில் இருந்து தனது கனவை திருடியது போல உணர்ந்த சந்திரு,அண்ணா எனக்கு என்னமோ பயமா இருக்குணா என்று வேதனையில் அழத் துவங்கினான்.ரவியும் பயந்து போக,எங்கிருந்தோ ஒரு தைரியத்தை திரட்டி காவல் நிலையத்திற்கு விரைந்தனர்.

ஒற்றை வண்ணம்

IMG_1423

நீயும் நீல வானில் நிலவெடுக்க,

அதிர்ந்து போனதடி என் உலகம்!

கரை சிந்திய படலமாய் மோடமிட்டாய்,

இடி தாக்கி இருண்டதடி எனதுலகம்!

என் காடெங்கும் பற்றி எரியுதடி,

கண்ணீர் கொண்டு அணைக்க ஆளில்லையே!

என்று கவிதையாய் கலைந்த கனவில் இருந்து விழித்தான் விக்ரம்.கனவை நினைத்ததும் தாரையாய்க் கொட்டியது கண்ணீர்.வேகமாய் கண்களை தேய்த்துக் கொண்டு எழுந்து நின்றவன்,கண்ணாடி முன் சென்றதும் கவலையின் படலம் அவனின் தாடியிலும் தலை முடியிலும் தெரிந்தது.பிச்சைக்காரன் போல இருந்த அவன்,தனது கோலத்தை சரி செய்ய சலூனுக்கு சென்றான்.ஞாயிறு என்பதால் கூட்டமாக இருந்த இடத்தில் பொறுமையாக தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டான்.ஒரு விதமான சோகம் அவன் முகத்தில் இருந்தாலும் அதை மறைக்க முயற்சி செய்து தனது நண்பன் அருணுக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு
“திருப்பூர் வரைக்கும் போகணும் ஒரு சின்ன வேலை,பாத்திட்டு ஈவ்னிங் வந்திடலாம்,,,,,வர்றயா?,,,,,,ம்ம்ம்ம் சரி ம்ம்ம்ம்” என்று புன்னகித்தவாறு பேசினான்.

தான் வாங்கிய புதிய சட்டையை உடுத்திக்கொண்டு,ஒரு கை கடிகாரம் ஒன்றை கட்டிக்கொண்டு தன் மனகஷ்டத்தை மறைத்தவாறு இருந்தான்.அருண் தனது வண்டியில் வர,இவனது புல்லட்டை தூசிதட்டி எடுத்து “போகலாம்” என்றான்.

விக்ரம் மற்றவரை கிண்டல் செய்வதில் வல்லவன் என்பதால் தனது வார்த்தைகளை குறைத்தே வந்தான் அருண்.அவன்  அமைதியாக இருப்பதற்கு அது மட்டும் காரணம் அல்ல,விக்ரமின் சோகமான வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்ததுவும்தான்.இருவரின் பயணமும் அமைதியாய் தொடர்ந்தது.

ஒரு மணி நேரத்தில் அவர்கள் இடத்திற்கு சென்றுவிட்டனர்.
ஒரு அழகான வீட்டு முன் நின்றனர்,அருணுக்கு திக் என்றானது.
“இங்க ஏன்டா கூட்டிட்டு வந்த,டேய் நீ இன்னும் திருந்தவே இல்லையா.உனக்கு,,”
என்று கோபத்துடன் பேசிய நண்பனின் தோல் மேல் கை போட்டு
அனைத்தையும் இழந்தவன் சிரிப்பதுபோல் சிரித்தான் விக்ரம்.

வீட்டுனுள் நுழைய ஒரு பெண் சிரித்துக்கொண்டே வந்து வரவேற்றாள்.விக்ரமுக்கு பேசக்கூட முடியவில்லை.விக்ரமின் கண்ணில் தேம்பி இருந்த கண்ணீரை பார்த்தான் அருண்.

சோபாவில் உட்கார சொல்லிவிட்டு அக்கா மற்றும் தாய் தந்தையிடம் நண்பர்கள் என்று அறிமுகம் செய்தாள்.

காபி போட்டு கொடுத்துவிட்டு
“வேலை இருக்கு வந்து விடுகிறோம்,பார்த்துக்கொள்”
என்று அக்காவிடம் சொல்லி சென்று விட்டார்கள் அவளின் தாயும் தந்தையும்.அவர்கள் செல்வதை பார்த்தவாறு கண்ணை தேய்த்துகொண்டிருந்தான்.அவளின் அக்கா இவர்களின் வேலை மற்றும் வாழ்க்கை பற்றி கேட்டுக்கொண்டிருந்தாள்.அவளின் கண்கள் இவனை ஒரு ஏக்கத்துடன் பார்த்தது.இவன் அழுவதை சமாளிக்க கண்ணில் தூசி விழுந்துவிட்டது என்று துடைத்துக் கொண்டே இருந்தான்.
அவள் ஒரு அறைக்குள் சென்று சுவற்றில் முட்டியவாறு கண்ணீர் வடித்தாள்.வார்த்தை தவறிவிட்டோம் என்று என்னி என்னி அழுதாள்.அழுகையின் அமைதியில் அவளது அக்கா அழைத்தது கேட்க கண்ணீரை துடைத்து எதுவுமே நடக்காததுபோல் சென்றாள்.

“நீ உள்ள உன் வேலையை பார்த்தது போதும் உன் ப்ரண்ட்ஸ் கிட்ட பேசிட்டு இரு,நான் போய் சமைக்குறேன்” என்று கோபித்தவாறு சென்றுவிட்டாள் அக்கா.

எதிரே இருக்கும் சோபாவில் அமர்ந்தாள்.ஒரு சிறிய அமைதிக்கு பிறகு
“எப்படி இருக்க விக்ரம்” என்றாள்.
“ஏதோ இருக்கிறேன்” என்று சொல்லி வலியில் புன்னகித்தான்.
“விக்ரம்,கண்ண மூடி திறக்குரதுகுள்ளே எல்லாம் நடந்திரிச்சு.நீ இப்புடி இருக்காத விக்ரம்,பார்க்க கஷ்டமா இருக்கு”என்று வருந்தினாள்.
விரலை தன் வாயில் வைத்து பேசாதே என்பது போல் கை அசைத்து அமைதியாக அழுதான்.

அவளும் பேசாமல் சில நிமிடங்கள் கழிந்தன.

“நீ எப்படி இருக்க மேகா” என்று ஏக்கத்துடன் கேட்டான் விக்ரம்.
“ம்ம்ம்ம் இருக்கேன்”

அமைதி படர்ந்தது.

“இரு வர்றேன்” என்று திருப்தி இல்லாமல் சொல்லிச் சென்றால் மேகா.

ஒரு குழந்தையின் பாஷை அருண் காதுக்கு எட்டியது.
“டேய் விக்ரம்” என்றான் அருண்.
நிமிர்ந்து பார்த்தான் விக்ரம்.மேகா தனது குழந்தையை கொஞ்சிக்கொண்டு தோழில் சாய்த்தபடி வந்தாள்.
ஆயிரம் கவலை இருந்தாலும்,மனதினுள் குழந்தையைக் காணும் சந்தோசம் அவன் முகத்தில் தெரிந்தது.

கையில் குழந்தையை வாங்கி புன்னகித்தான்.குழந்தையும் ஏதோ ஒன்றை கண்டதுபோல் புன்னகித்தது.அருணிடம் குழந்தையை கொடுத்து விட்டு தனது பாக்கெட்டில் கைவிட்டு சிறிய மஞ்சள் நிற பெட்டி ஒன்றை எடுத்தான்.

அதிலிருந்த சின்ன சங்கிலி ஒன்றை அக்குழந்தைக்கு அணிவித்ததோடு குழந்தையின் கன்னத்தில்  ஒரு முத்தமும்  கொடுத்தான்.

மேகாவின் கண்கள் கலங்கியது!

மேகாவை பார்த்தபடியே வீட்டை விட்டு சொல்லாமல் கூட வெளியேறினான் விக்ரம்!

 

புதிய பாதை!