அந்த நாள் முதல்

image

கண்ணோடு கலந்தாடிய கனவுகளை கரையேற்ற போராடிய காலம் என் கல்லூரியின் காலம்.
படிப்பா அப்புடினா என்னனு கேக்குற அளவுக்கு சுற்றித் திறிந்த காலம்.
“பாட்டு பாடவா பாடம் கேட்கவா பறந்து செல்லவா”என்று எந்நேரமும் குஷியாக பாட்டு பாடிட்டு விளையாடிட்டி இருக்குமளவுக்கு நண்பர்கள் துணையுண்டு.பசங்க கூட இருக்கும் போது இருந்த துணிச்சலும் வீரமும் ஒரு jaguar கார் வாங்குனா எப்பிடி பீல் ஆகுமா அந்த அளவுக்கு இருந்தது சொல்லப் போனா அதுக்கும் மேல.
பெரிய நட்புக்கு இலக்கணமாதிரி ஒழுங்காட்டம் பேசாதடா நீ அப்படி பண்ணினவந்தான இப்படி பண்ணினவந்தான என்று நினைக்கும் என் அன்பு உள்ளங்களே கொஞ்சம் பொருமையா இருங்க உங்களுக்கு நான் இதை எழுதல.
முதலாம் ஆண்டு
காலேஜ்னா என்னடா courseஆ அப்புடீனா,ஓ ஒரு வேல கவுதம் மேனன் படத்துல வர்ற மாதிரி செம கெத்தா இருக்குமோனு நினைச்சு மெக்கானிக்கல் படிச்சா, ஒரே fire சும்மா கொழுந்துவிட்டு எறியுது.தீ எப்புடி தண்ணியாச்சுனு கேக்குறீங்களா?எங்க போனாலும் நம்ம டேஸ்ட்டுக்கு மேட்ச் ஆகுற மாதிரி சில நண்பர்கள் அமைவாங்க இல்லையா அப்புடிதான் எனக்கும்.சில சமயம் வேற டேஸ்ட் உள்ளவுங்களும் நண்பர்கள் ஆவாங்க இல்லையா அதுவும் உண்டு.cricketல தொடங்கி அடிதடி வரை வளர்ந்தது இந்த நட்பு.சரி எல்லாரும் எப்படி படச்சீங்கனு கேட்டா?அதுக்கு ஒரே பதில் “Please be quite”.எத்தனை படங்கள் எத்தனை சிரிப்புகள் சில அழுகையும் உடன் சேர்க்கலாம்.சுருக்கமா சொல்லனும்னா காலேஜ முதல் ஆண்டிலேயே வெறுத்திட்டேன்.Discontinue ஆக வீட்ல விடல.அப்பவே எனக்கு தெரியும் சோனமுத்தா போச்சா?னு.
இரண்டாம் ஆண்டு
“Second yearல இருந்து காலேஜ் என் கன்ட்ரோல வந்திருச்சு”
வெறும் டோன மட்டுமே கேட்டிட்டு,அப்படி எல்லாம் நினைக்காம enjoyment தான் லைப்ங்குற மாதிரி வாழ்ந்தேன்.சில புதிய முயற்ச்சிகள் வெறும் முயற்சி மட்டும் தான் வெற்றி இல்ல.

image

நிறையா பெர்சனல் problem மூன்றாம் ஆண்டுல.இருந்தும் நண்பர்கள் துணையுண்டு என்பதை என்றும் நான் மறப்பதில்லை.
நான்காம் ஆண்டு நல்ல enjoyment தான்.பிறிவு மட்டுமே என்னை பிறிய வேண்டும் என்று இன்று வரை ஏக்கம் ஒரு பாடாகத்தான் உள்ளது.வாழ்க்கையில் அனைவரும் ஓடுகின்ற தருணமிது இதில் பாதையே இல்லாத காட்டில் படிக்கட்டுகள் அமைப்பது கடினமே,அமைவதும் கடினமே.வெற்றிக்காக போராடும் நம்மில் எவரேனும் தோற்றதுண்டா?வெற்றியை கானாமல் இருந்திருக்கலாம் ஆனால் தோற்றதில்லை.கிழை முறிந்தாலும் வீழ்வதை விரும்பமாட்டோம்.என்றுமே நம்முள் இருக்கும் இவ்வலைகள் ஓயாது நம் இதயம் தூங்காது.

image

image

28 thoughts on “அந்த நாள் முதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *