அழகான ஒரு பயணம்

This slideshow requires JavaScript.

இந்த காலத்துல நமக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவா கிடைக்குது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.இதன் காரணத்தால் பலரை போல் எனக்கும் கண் கண்ணாடி போட நேரிட்டது.அது ஒரு பங்கு சந்தை மாதிரி அப்பப்போ பவர் குறையும் அப்பப்போ ஏறும்.இதனை சரி செய்ய பாண்டிச்சேரியில் அரவிந்தர்(ஆரோபிந்தோ) என்ற இடத்தில் கண் பயிற்சி கற்று கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து நானும் என் நண்பனும்(அவரின் உறவினர்கள் இருவரும் கிளம்பினோம்).சென்னை கூட செல்லாத எனக்கு இது ஒரு மறக்க முடியாத பயணமாய் அமைந்தது.முன் கூட்டியே நாம் செல்லும் தேதியை அவர்கள் தீர்மானித்து விடுவார்கள்.ஒரு வாரம் என் மனதிற்கு அழகான பயணம்.மிதிவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து கொண்டு சுற்றி திறிந்தோம்.உணவுகளை தள்ளு வண்டி கடைகளில்தான் அதிகமாக உண்டோம்.காலை மாலை என இரண்டு முறை பயிற்சி மேற்கொண்டோம்.கடற்கரையில் நடந்து மழையில் நனைந்து ஐஸ் கிரீம் உண்டு அழகாக சுற்றினோம்.எனக்கு அங்கு இருந்த கவலையே என் கையில் புகைப்படம் எடுக்க கூட சரியான கேமரா இல்லை என்பதுதான்.

என் நண்பர் தனது உறவினர்களும் வருகிறார்கள் என்று சொன்னதும் சற்று பயந்தேன்(அதற்கு காரணம் நண்பர்களுக்குள் இருக்கும் அந்த சின்ன சந்தோசமே அழகான பேச்சுக்களும் குட்டி சண்டைகளும் தான்).அனால் அப்பா(கந்தசாமி அவர்கள்) அழகான மனிதர்.இன்று அவருடன் பேசினாலும் நிறைய புதுமைகள்,சிரிக்கும்படியான சுவாரசியமான பேச்சுகளும்,,இன்று நினைத்தாலும் எனக்கு தித்திப்பை ஏற்படுத்துகிறது.விவசாயம் பற்றியும் தன்னை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் பற்றியும் அழகாக விவரித்தார்.அதில் எந்த அளவு நான் மகிழ்ச்சியில் இருந்தேனோ அதே அளவு அத கடற்கரை சாலை.என்ன ஒரு அழகு அந்த அலைகளும் அதன் ஓசைகளும்.எத்தனை வருடம் வேண்டுமானாலும் அங்கே இருக்கலாம் என்ற உணர்வு.நான் சென்று கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது இருந்தாலும் நினைவலைகள் ஓய்வதில்லை.

பி.கு:என் கண்பார்வை நன்றாக உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *