ஆசை என்னும் பட்டாம்பூச்சி!

image

ஒரு சிறுவனின் கால்கள் தெரிகிறது(அதனை சுற்றி பல சிறுவர்களின் ஷூக்கள் அணிந்த கால்கள் தெரிகிறது)இவற்றின் நடுவில்  அவனின் செருப்பு தொய்ந்துள்ளதைக் காண முடிகிறது.அப்படியே நடந்து சென்று ஒரு சுவரில் சாய்ந்து அமர்கிறான்,முகத்தில் வேறு எந்த வித சலனமும் இல்லாமல் தொய்ந்து போன தன் செருப்பை சரி செய்ய முயல்கிறான் ஆனால் முடியவில்லை.அவனின் அந்த ஏக்கத்துடன் கூடிய சோகப் பார்வை ஒரு சிறுவனின் கால்களுக்கு செல்கிறது,அங்கே தன் ஷூவை பலபலக்க அவன் துடைத்து கொண்டே நகர்கிறான்.இறுதியில் அங்கு ரயில் வந்து விட்டது(அது ஒரு ரயில் நிலையம்)அதில் தன் பெற்றோர் அழைக்க மீண்டும் தனது ஷூவை சுத்தம் செய்தவாறு ரயிலில் ஏற நகர்கிறான் ஏறும்பொழுது கூட்ட நெரிசலில் தன் கால்களில் இருந்த ஒரு ஷூ கழன்று விட்டது,ரயிலும் நகரத் துவக்கிய அந்த நொடியில் ஆசையான பொருளைத் துழைத்த தருணம் நம் கண் முனனே வந்து செல்கிறது.இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அச்சிருவன் ஓடி வந்து அந்த ஷூவைப் பார்க்கிறான் விரைந்து சென்று அதை கொடுக்கும் முயற்சியில் கடைசியாக எறிந்தும் பார்க்கிறான் ஆனால் ரயில் பெட்டியில் பட்டு கீழே விழுந்துவிட்டது.இதனை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் தன் மற்றொரு ஷூவை கழற்றி அச்சிறுவனை நோக்கி எரிகிறான்.அதனை எடுத்த அச்சிறுவன் அந்த ஷூவையே உற்றுப் பார்க்கிறான்.மற்றொரு பக்கம் தன் இரு ஷூக்களையும் விட்டுவிட்டு சந்தோஷமாக அவனை நோக்கி கை அசைக்கிறான் ரயிலில் செல்லும் சிறுவன்.இதற்கு பதிலாக ஷூவை எடுத்த சிறுவனும் கையசைக்கிறான்.இத்தோடு அந்தக் குறும்படம் முடிகிறது.கண்ணில் கண்ணீர் வரவில்லை ஆனால் உணர்வுகளை சீண்டியது போல உள்ளதா? இது விருது வாங்கிய ஒரு குறும்படம்.எந்த மொழி எந்த விருது என்பது நமக்கு தேவையற்றது.என்ன ஒரு அழகான நேர்த்தியான படைப்பு என்பது மட்டுமே பேசப்படும்.இதுவே நான் சமீபத்தில் பார்த்த குறும்படம்.என்னை மிகவும் கவர்ந்த குறும்படம்.

image

5 thoughts on “ஆசை என்னும் பட்டாம்பூச்சி!

  1. I have been browsing online greater than 3 hours as of late,
    but I never found any fascinating article like yours. It is pretty value
    sufficient for me. Personally, if all website owners and bloggers made just right
    content material as you did, the internet will probably be much more useful than ever
    before.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *