இந்தியாவும் சீனாவும்

image

1962-20th oct. to 21st nov.
நாம் இழந்தது காதல் அல்ல காவியம் அல்ல நம்மை தான்.யார் யாரை நம்புவது என்று கூட தெரியாத வெள்ளந்தியாய் வளம் வந்திருக்கிறது இந்தியா. 1950களில் இருந்து தொடங்கிய பல எல்லை பிரச்சனையை கருத்தில் கொண்டிருந்தால் வெற்றியை விட ஏமாற்றத்தை அடையாமல் இருந்திருக்கலாம்.Aksai chin மற்றும் North east frontier agencyஐ கைப்பற்றவே இந்தப் போராட்டம்.

image

அப்பொழுது வழுவான அரசாக உள்நாட்டிற்கு திகழ்ந்தது நேருவின் தலமைதாங்கிய இந்திய அரசு.1951 மற்றும் 1952ல் எங்களின் பங்கு இந்தியாவில் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறியது சீனா(நாடகத்தின் தொடர்ச்சி).ஒருவேளை பிரச்சனைகள் எழுமோ என்று எண்ணி 1954ல் நேரு சீனாவிற்கு கடிதத்தின் மூலமாக இந்தியாவின் எல்லை உரிமையை தெரிவித்தார்.அதன் பிறகும் எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருந்தது சீன அரசு.இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் அதே ஆண்டில்
Five principles of peaceful coexistence என்ற ஒப்பந்தத்திற்கு சீனாவை அழைக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் இந்தியா அதில் பங்கேற்காமல் இருந்தது பிற நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.நட்பிற்கு இலக்கணமாக இந்தியா திகழ்ந்தது வெளிப்படையாக எல்லா நாட்டிற்கும் அன்றே தெரிந்தது.பிறகு 1956ல் கூட சீனா எந்த வித எல்லை சம்பந்தப்பட்ட உரிமையையும் கூறவில்லை.இவை அனைத்தையும் தாண்டி இந்த பிரச்சனைகளின் உச்சமாக உருவெடுத்தது Tibet uprising.1959 marchல் Tibet china ஆதிக்கப் போரில் இந்தியாவின் செயல்பாடு.அதில் 14th Dalia lama Tenzin Gyatso வுக்கு அடைக்களம் கொடுத்தது இந்தியா.இதற்குக் காரணம் புத்த வழிபாட்டின் மேல் கொண்ட பாசமிகு ஈடுபாடுதான் என்பதை அறியாமல் சீனா கோபமடைந்தது.இதன் வெளிச்சமாக சீனாவின் PRC(People’s Republic Of china)தலைவர் Mao Zedong நேருவை வெளிப்படையாக எதிர்த்தார்.
“BE SHARP,DON’T FEAR TO IRRITATE HIM,DON’T FEAR TO CAUSE HIM TROUBLE.NEHRU MISCALCULATED THE SITUATION BELIEVING THAT CHINA COULD NOT SUPPRESS THE REBELLION IN TIBET AND WOULD HAVE TO BEG INDIA’S HELP”

image

இவ்வளவு நாள் மெளனமாக ஏமாற்றிய Zhou Enlai(The first premier of PRC) கடைசாக தன் வார்த்தைகளில் கோபத்தை வெளிக்காட்டினார்.
“NEHRU AND PEOPLE FROM THE INDIAN UPPER CLASS OPPOSE REFORM IN TIBET,EVEN TO THE EXTENT OF SAYING THAT REFORM IS IMPOSSIBLE…TIBET TO REMAIN FOR A LONG TIME IN A BACKWARD STATE,BECOMING A BUFFER STATE BETWEEN CHINA AND INDIA”
இதன் பிறகு தான் இத்தனை நாள் மனதுக்குள் பூட்டி வைத்திருந்த கோபத்தை வெளிப்படுத்தினார் Zhou Enlai.
Aksai chin மற்றும் Himachalஐ தங்களுக்கே சொந்தம் என்று வரைபடங்களை காட்டத் துவங்கியது சீன அரசு.
1960ல் இருநாட்டின் சந்திப்பும் நடந்தது என்பது அந்த நேரத்தின் ஒரு இனிமையும் கடுமையும் கலந்த பகுதி.ஆனால் இருநாடும் எந்த ஒரு உடன்பாட்டையும் எட்டவில்லை என்பது பிற்காலத்தில்தான் தெரிந்தது.1960ல் G.N.Thapar(Army chief) போர் துப்பாக்கிகள் பற்றிய குறைபாடுகளை V.k.Krishna menon(Defence minister) மற்றும் நேருவிடமும் கூறியிருக்கிறார்.ஆனால் அவர்கள் நமக்குப் போர் நடக்க வாய்ப்பு இல்லை என்று அலட்சியப்படுத்திவிடவே வீனாகின பொன்னான விதைகள்.
1961ல் நேரு B.M.Khaul(army chief of general staff)ஆக நியமித்தார்.ஆனால் அவர் போருக்கு தயாராக சோம்பேரித்தனத்தையே கையாண்டார்.இதன் விளைவாக 1962ல் உளவுத்துறையின் தகவலின்படி சீனாவின் ஊடுறவலை அறிந்தது இந்தியா.ஆனால் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க முடியவில்லை.இதில் கண் துடைக்கும் பாசமிகு தருணம் எது என்றால் பாகிஸ்தானின் உதவிக்கரம் ராணுவத்திற்கு கிடைத்தது என் போர்க்களம் மிக மோசமான மலை பகுதியில் நடந்தது உயிரிழப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.வெறும் 10000-12000 வீரர்களைக்
கொண்டு 80000 சீன வீரர்களை பழைய ஆயுதங்களைக் கொண்ட எதிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இந்தியாவிற்கு இருந்தது.1383 இந்திய வீரர்கள் கொள்ளப்பட்டார்கள்,1047 பேர் காயமடைந்து 1696 பேர் துழைந்து போனார்கள் என்றும் 3968 பேர் மாட்டிக்கொண்டார்கள் என்றும் விக்கி விவரம் சொல்கிறது.அவர்களில் 722 பேர் கொள்ளப்பட்டார்கள் என்று விக்கி தகவலின்படி சொல்கிறேன்.கடைசியில் போர் புறா தூதாக பறந்தது நேருவின் கடிதம்.இதன் முடிவாக எல்லைகளில் இருந்த தனது ராணுவ வீரர்களின் positionல் இருந்து withdraw செய்தது சீனா.
இறுதியில் தனது பாதுகாப்பு வீரர்களை Aksai chinல் இருந்து பின் தள்ளி வைத்தது இந்தியா.
தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத இந்திய அரசில் நேருவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது,கிருஷ்ணா மேனன் பதவி விலகினார்.
இன்றுவரை ஏதோ ஒரு இடத்தில் எல்லைப் பிரச்சனை வந்த கொண்டுதான் இருக்கிறது.இதற்கு முடிவுகள் கிடைக்கப்பட வேண்டும்.

1 thought on “இந்தியாவும் சீனாவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *