ஒற்றை வண்ணம்

IMG_1423

நீயும் நீல வானில் நிலவெடுக்க,

அதிர்ந்து போனதடி என் உலகம்!

கரை சிந்திய படலமாய் மோடமிட்டாய்,

இடி தாக்கி இருண்டதடி எனதுலகம்!

என் காடெங்கும் பற்றி எரியுதடி,

கண்ணீர் கொண்டு அணைக்க ஆளில்லையே!

என்று கவிதையாய் கலைந்த கனவில் இருந்து விழித்தான் விக்ரம்.கனவை நினைத்ததும் தாரையாய்க் கொட்டியது கண்ணீர்.வேகமாய் கண்களை தேய்த்துக் கொண்டு எழுந்து நின்றவன்,கண்ணாடி முன் சென்றதும் கவலையின் படலம் அவனின் தாடியிலும் தலை முடியிலும் தெரிந்தது.பிச்சைக்காரன் போல இருந்த அவன்,தனது கோலத்தை சரி செய்ய சலூனுக்கு சென்றான்.ஞாயிறு என்பதால் கூட்டமாக இருந்த இடத்தில் பொறுமையாக தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டான்.ஒரு விதமான சோகம் அவன் முகத்தில் இருந்தாலும் அதை மறைக்க முயற்சி செய்து தனது நண்பன் அருணுக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு
“திருப்பூர் வரைக்கும் போகணும் ஒரு சின்ன வேலை,பாத்திட்டு ஈவ்னிங் வந்திடலாம்,,,,,வர்றயா?,,,,,,ம்ம்ம்ம் சரி ம்ம்ம்ம்” என்று புன்னகித்தவாறு பேசினான்.

தான் வாங்கிய புதிய சட்டையை உடுத்திக்கொண்டு,ஒரு கை கடிகாரம் ஒன்றை கட்டிக்கொண்டு தன் மனகஷ்டத்தை மறைத்தவாறு இருந்தான்.அருண் தனது வண்டியில் வர,இவனது புல்லட்டை தூசிதட்டி எடுத்து “போகலாம்” என்றான்.

விக்ரம் மற்றவரை கிண்டல் செய்வதில் வல்லவன் என்பதால் தனது வார்த்தைகளை குறைத்தே வந்தான் அருண்.அவன்  அமைதியாக இருப்பதற்கு அது மட்டும் காரணம் அல்ல,விக்ரமின் சோகமான வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்ததுவும்தான்.இருவரின் பயணமும் அமைதியாய் தொடர்ந்தது.

ஒரு மணி நேரத்தில் அவர்கள் இடத்திற்கு சென்றுவிட்டனர்.
ஒரு அழகான வீட்டு முன் நின்றனர்,அருணுக்கு திக் என்றானது.
“இங்க ஏன்டா கூட்டிட்டு வந்த,டேய் நீ இன்னும் திருந்தவே இல்லையா.உனக்கு,,”
என்று கோபத்துடன் பேசிய நண்பனின் தோல் மேல் கை போட்டு
அனைத்தையும் இழந்தவன் சிரிப்பதுபோல் சிரித்தான் விக்ரம்.

வீட்டுனுள் நுழைய ஒரு பெண் சிரித்துக்கொண்டே வந்து வரவேற்றாள்.விக்ரமுக்கு பேசக்கூட முடியவில்லை.விக்ரமின் கண்ணில் தேம்பி இருந்த கண்ணீரை பார்த்தான் அருண்.

சோபாவில் உட்கார சொல்லிவிட்டு அக்கா மற்றும் தாய் தந்தையிடம் நண்பர்கள் என்று அறிமுகம் செய்தாள்.

காபி போட்டு கொடுத்துவிட்டு
“வேலை இருக்கு வந்து விடுகிறோம்,பார்த்துக்கொள்”
என்று அக்காவிடம் சொல்லி சென்று விட்டார்கள் அவளின் தாயும் தந்தையும்.அவர்கள் செல்வதை பார்த்தவாறு கண்ணை தேய்த்துகொண்டிருந்தான்.அவளின் அக்கா இவர்களின் வேலை மற்றும் வாழ்க்கை பற்றி கேட்டுக்கொண்டிருந்தாள்.அவளின் கண்கள் இவனை ஒரு ஏக்கத்துடன் பார்த்தது.இவன் அழுவதை சமாளிக்க கண்ணில் தூசி விழுந்துவிட்டது என்று துடைத்துக் கொண்டே இருந்தான்.
அவள் ஒரு அறைக்குள் சென்று சுவற்றில் முட்டியவாறு கண்ணீர் வடித்தாள்.வார்த்தை தவறிவிட்டோம் என்று என்னி என்னி அழுதாள்.அழுகையின் அமைதியில் அவளது அக்கா அழைத்தது கேட்க கண்ணீரை துடைத்து எதுவுமே நடக்காததுபோல் சென்றாள்.

“நீ உள்ள உன் வேலையை பார்த்தது போதும் உன் ப்ரண்ட்ஸ் கிட்ட பேசிட்டு இரு,நான் போய் சமைக்குறேன்” என்று கோபித்தவாறு சென்றுவிட்டாள் அக்கா.

எதிரே இருக்கும் சோபாவில் அமர்ந்தாள்.ஒரு சிறிய அமைதிக்கு பிறகு
“எப்படி இருக்க விக்ரம்” என்றாள்.
“ஏதோ இருக்கிறேன்” என்று சொல்லி வலியில் புன்னகித்தான்.
“விக்ரம்,கண்ண மூடி திறக்குரதுகுள்ளே எல்லாம் நடந்திரிச்சு.நீ இப்புடி இருக்காத விக்ரம்,பார்க்க கஷ்டமா இருக்கு”என்று வருந்தினாள்.
விரலை தன் வாயில் வைத்து பேசாதே என்பது போல் கை அசைத்து அமைதியாக அழுதான்.

அவளும் பேசாமல் சில நிமிடங்கள் கழிந்தன.

“நீ எப்படி இருக்க மேகா” என்று ஏக்கத்துடன் கேட்டான் விக்ரம்.
“ம்ம்ம்ம் இருக்கேன்”

அமைதி படர்ந்தது.

“இரு வர்றேன்” என்று திருப்தி இல்லாமல் சொல்லிச் சென்றால் மேகா.

ஒரு குழந்தையின் பாஷை அருண் காதுக்கு எட்டியது.
“டேய் விக்ரம்” என்றான் அருண்.
நிமிர்ந்து பார்த்தான் விக்ரம்.மேகா தனது குழந்தையை கொஞ்சிக்கொண்டு தோழில் சாய்த்தபடி வந்தாள்.
ஆயிரம் கவலை இருந்தாலும்,மனதினுள் குழந்தையைக் காணும் சந்தோசம் அவன் முகத்தில் தெரிந்தது.

கையில் குழந்தையை வாங்கி புன்னகித்தான்.குழந்தையும் ஏதோ ஒன்றை கண்டதுபோல் புன்னகித்தது.அருணிடம் குழந்தையை கொடுத்து விட்டு தனது பாக்கெட்டில் கைவிட்டு சிறிய மஞ்சள் நிற பெட்டி ஒன்றை எடுத்தான்.

அதிலிருந்த சின்ன சங்கிலி ஒன்றை அக்குழந்தைக்கு அணிவித்ததோடு குழந்தையின் கன்னத்தில்  ஒரு முத்தமும்  கொடுத்தான்.

மேகாவின் கண்கள் கலங்கியது!

மேகாவை பார்த்தபடியே வீட்டை விட்டு சொல்லாமல் கூட வெளியேறினான் விக்ரம்!

 

1 thought on “ஒற்றை வண்ணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *