கவனம்

image

இந்தியா என்னும் பெருங்கடலில் இறந்துபோகும் உயிர்களின் கணிப்பு எண்ணிக்கையை எவரேனும் அறிவதுண்டா?இவ்வுயிரைக் கண்கானிக்க இறந்தவர்களின் காரணச்சாவு பற்றி அறிவதுண்டா?
“பத்து தடவை கீழ விழுந்தாதான் சைக்கில் கத்துக்க முடியும்”
அப்போ பத்து தடவை விழுந்த உடனே நான் போர்க்கு தயாரானு கேட்டா என்ன பண்ண முடியும்.சரி வல வல கொழ கொழனு பேசாம விஷயத்துக்கு வர்றேன்.சமீபத்தில் நம்ம டீ கடை பெஞ்ச்ல(கூகுள்) உக்காந்து பேசீட்டு இருந்த போது 2014ல நடந்த விபத்துகள் பற்றின ஒரு சிறு புள்ளி விபரம் கிடைச்சிது அது சுட்ட தகவல் என்பதால் இதோ அதன் லிங்க்
http:// http://sites.ndtv.com/roadsafety/important-feature-to-you-in-your-car/
விபத்துகள் எதனால் நடக்கிறது என்பதை எனக்கு அறிந்தவாரு விவரிக்கிறேன்.
1.கவனம்
2.தலை கவசம்
3.செல்போன்
4.சீட் பெல்ட்
5.குடி
6.குட்டி
7.ரூல்ஸ்…..
இன்னும் நிறையா இருக்கு இதுல ஏன் இதை மட்டும் நான் சொல்றன்னா,இதுல சம்பந்தபடுற மாதிரி சில விபத்தை பார்த்திருக்கேன்.இன்னும் தெளிவா சொல்லனும்னா ஒரு சிக்னல் அதில் நான் நின்று கொண்டிருந்தேன்.எதிர் சிக்னலில் வண்டிகள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது ஒரு 407 போன்ற வண்டி சிக்னல் முடியும் ஓரத்தில் விரைந்தது பின்னாடியே ஒரு verito ஐந்து அடி தூரத்தில் விரைந்து வந்தது.அடிச்சான் பாருயா பிரேக்க 407 காரன் அடிச்சான் பாருயா பிரேக்க verito காரன்.பேனட் நாசமாகிவிட்டது.அப்புறம் என்ன ஆச்சு?என்ற கேள்விக்கு எனக்கு சிக்னல் போட்டுட்டாங்க அப்டிங்குறது தான் பதில்.இதுல யார் தப்பு யார் சரினு சொல்ல முடியமா கொஞ்சம் கஷ்டம்தான அதே தான் பிரச்சணை.என்னோட கணிப்பு என்ன அப்புடினா மெதுவா வந்திருக்களாம் அவ்வளவுதான்.
     டுத்தது ஊரிலிருந்து என் உறவினர் ஒருவர் அவ்வப்போது வருவார்.அவர் வரும்பொழுது தவறாமல் தலை கவசம் அணிந்து வருவார் அதுமட்டுமல்லை என்னை கட்டாயப்படுத்தி தலை கவசம் அணிய சொல்லும் ஒரு நபர் அவர்தான்.காரணம் அவருக்கு ஏற்பட்ட அணுபவங்கள்.அவர் மூன்று நான்கு முறை கீழே விழுந்திருக்கிறார் ஆனால் தலையில் லேசான கீரல் கூட இல்லை காரணம் அந்த தலை கவசம் தான்.ISI முத்திரை உடையதை பயன்படுத்தவும் அறிவுரைப்பார்.இந்த காலத்துல இப்படி ஒரு நல்ல மனுஷனானு கேட்டா?ஆம் இது உண்மை தான் என்பதே என் விடை.
இதே போல் 2013ல் என் நண்பன் வாகன விபத்தில் இறந்தான்.தலை கவசம் இல்லை,வேகம் அதிகம் என்பதை அறிந்து கொண்டேன்.
வண்டி ஓட்டிக் கொண்டே அலைபேசியில் பேசுவது,குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது.கவனமில்லாமல் ஓட்டுவது,சிகனலை சரியாக மதிப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்பது என் அன்பு உள்ளங்களுக்கு எனது வேண்டுகோள்.
   தவறுகள் திருத்தப்பட வேண்டும்.தவறுகளை உணர வேண்டும்.இளைஞர்களே மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்.குடி கூத்து என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட ஆசைகள் அதில் மற்றொரு வாழ்வை பறிப்பதும் நம்மால் இழப்பதும் சரியல்ல.நாம் சட்டம் என்பதை விட உயிர் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.நமக்கான கனவுகளை இழக்காமல் இறக்காமல் வாழ்ந்துவிட வேண்டும்.
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *