காளை காளை……

சில வாரங்களுக்கு முன் ஒரு ஞாயிற்று கிழமை எப்பொழுதும் போல சுடு சோம்பேறியாய் என்னை விழிக்கச் செய்து.எழுந்து விளையாடிவிட்டு என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தேன்,அப்பொழுது அடித்தது அந்த அலைபேசி.

டேய் ரேக்லா ரேஸ் நடக்குதாமா வா பாக்கலாம்.

இதுவரை ரேக்லா பந்தயத்தை பார்த்ததில்லை என்பதனால் மிகுந்த ஆர்வத்துடன் என் கையில் இருந்த ஒரு காமெராவை எடுத்துகொண்டு கிளம்பினேன்(ரேஸ் ஓட்ட போவது போல ஒரு தோரணை கொண்டு).அங்கு சென்று பார்த்தால் நல்ல கூட்டம்.என்னை போலவே வேறு இரண்டு தனிப்படை காமெராவில் இயங்கிக்கொண்டிருந்தது.ஒருவர் தரையில் அமர்ந்தவாறு புகைப்படத்தை எடுத்துகொண்டிருந்தார்.மற்றொருவர் நின்றவாறு எடுத்துகொண்டிருந்தார்.அவர்கள் நல்ல புகைப்பட கலைஞர்கள் என்பது பார்த்தவுடன் தெரிந்தது.

கருநிறம்,செந்நிறம்,வெள்ளை நிறம் என்று அருமையான காளைகளும்,ஒரு சிறுவன் அதில் ஒரு காளையை கொண்டு சென்றதும் அழாகான விஷயங்கள்.முதலில் நூறு மீட்டர் அடுத்து முன்னூறு மீட்டர் பந்தயம் நடந்தது.காளைகள் வண்டியில் பூட்டப்பட்டு சீறி பாய்ந்தது.இன்னுமும் நம் கலாச்சாரம் நீடிக்க எத்தனை போராட்டங்கள் செய்தாலும் சரி என்று மீண்டும் தோன்றிய தினமாய் மாறிப்போனது அன்று.

1 thought on “காளை காளை……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *