ஜாக்கிரதை!

the_108_ambulance

நேற்று எனது ஊரில் ஒரு விபத்து.அந்த விபத்து நடந்த இடம் என் பணியிடத்தை விட சிறிது தூரம்.முதலில் ஒரு ஆம்புலன்ஸ் சென்றது(government ambulance).இரண்டாவது ஒரு ஆம்புலன்ஸ்(private) அதன் பின் ஒரு பத்து அடி தூரத்தில் சென்றது.பின்னே சென்ற ஆம்புலன்ஸ் மடமடவென முன்னே செல்லும் அம்புலன்சை முந்தி அங்கு உள்ள அனைவரையும் பயம்படுத்தியபடி நின்றது.

அங்கு உள்ள அந்த விபத்துக்குலானவரை தூக்கி சென்றது.இதில் பலரும் பேசுவது என்னவென்றால் எதற்காக இவர்களுக்குள் இவ்வளவு போட்டி.ஒரு வேலை பேசி வைத்து வந்திருப்பார்களோ என்று ஒரு சந்தேகம்.அது சந்தேகமே இல்லை உண்மை தான் என்று என் நண்பர்கள் நேரில் பார்த்தது போல கூறினார்கள்.இதே போன்று ஒரு சம்பவம் அம்புலன்சில் அடிபட்டவரை ஏற்றிக்கொண்டு மருத்துவரிடம் பேரம் பேசியே அவரை கொன்றுவிட்டதாக ஒரு நம்பத்தகுந்த தகவல்.இவங்களுக்கெல்லாம் விஜயகாந்த் மாதிரி தான் பேசணும் போல

மனித உயிர் என்ன அவ்ளோ சாதரணமா போச்சா.

ஜாக்கிரதை!

டேய் திருந்துங்கப்பா உயிர் காப்பாத்தும் டாக்டரும் நீங்களும் ஒன்னு தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *