தம்பி,,,,,,

wineqsc-lg

நானும் என் நண்பர்களும் வழக்கமாக ஒரு கடையின் முன் அமர்ந்து பேசுவோம்.அப்படி பேசும்போது ஒரு சத்தம் திரும்பி பார்த்தா ஒரு பைக்கில் ஒருவர் அமர்ந்து ஏதோ பேசிகொண்டிருந்தார்.யாரை பார்த்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்தல் ரோட்டில் ஒருவர் கீழே கிடக்கிறார்.அவரோ எந்திரிக்க கூட முடியாத அளவுக்கு போதையில் உள்ளார்.கஷ்டப்பட்டு அவரை தூக்கி விட்டு பைக்கில் அமர்த்திவிட்டு அந்த நபர் சென்று விட்டார்.மெல்ல அசைந்து அசைந்து நாங்கள் இருக்கும் இடத்திற்கு ஒரு வழியாக வந்துவிட்டார்.சிறிது நேரம் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.தேடிமுடித்தவுடன் என் நண்பனை தம்பி என்றழைத்தார்.எனக்கு என்ன தோன்றியது என்னவென்றால் அறுவை ஆரம்பம் என்றுதான்.

அவனும் அருகில் சென்றான்.மீண்டும் ஒரு முறை தம்பி என்றார் அதற்குள் அவரது அலைபேசி அழைத்தது.பேசி முடித்துவிட்டு,

தம்பி உன் பேர் என்ன என்றார்.

அதை கூட ஒழுங்கா கேட்காம இந்த சைடு ஸ்டாண்ட எடுத்து விடு என்றார்.

சுத்தி வந்து பார்த்த அவன் சிரிக்கவும் முடியாமல் அழுகவும் முடியாமல் போட்டுதாங்க இருக்கு என்றான்.என்ன ஒரு அலப்பறை!

அங்கேயே படுத்து உறங்கியவர் தான்.நாங்கள் போகும்வரை உறங்கிக்கொண்டே இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *