நானும் ஒரு நடிகனே!

image

ஓடும் வேகத்தில் கால் தடுமாறி கீழே விழுந்தாலும் தன் தந்தையிடம் திட்டு வாங்குவதை தவிர்க்க விழுந்ததை மறைப்பதே ஆயிரம் அழகு.அதேபோல பல இன்னல்களில் தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் தன்னை மாற்றிக்கொள்வதே வழக்கமாக கொண்டுள்ள நாம்தான் Decaprioவை விட பெரிய நடிகர்கள்.அங்கே துவங்கி நம் மனதில் எழும் கோபத்தை பாவத்தை வெருப்பை கண்ணியத்தை அடையாளத்தை  மறைக்க போலி வேடமிட்டு அழைகிறோம்.இவ்வாறு நடித்தும் நம்மால் அனைவரையும் திருப்திபடுத்த இயலாது.காரணம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசைகள் தனக்கென தனிப்பட்ட கருத்துக்கள்.உதராணத்தற்கு உங்களுடன் ஐந்து நண்பர்கள் உள்ளனர் அதில் ஒரு முக்கியமான(நண்பர்களுக்கு ஒரு ஜாலியான என்று வைத்துக் கொள்வோம்)முடிவு எடுக்கும் தருணம் வருகிறது.அது எதை பற்றியது என்றால் அந்த ஐவரில் ஒருவரின் காதல் விவகாரம் என்று வைத்துக்கொள்வோம்.ஏன் அந்த முடிவை நீங்கள் தான் கூற வேண்டும் என்பதை விட்டுவிடுவோம்.சில பல சென்ஸார்களை வைத்து அந்த பிரச்சணையை முடித்துக் கொள்வோம்.அப்பொழுது நாட்டாமையைப் போல தீர்ப்பு கூறுகிறீர்கள், அதனை ஏற்க மறுப்பவர்கள் அதில் நிச்சயமாக ஒருவர் இருப்பர்.இல்லை நொல்லை என்றெல்லாம் எண்ணாதீர்கள் வேண்டுமானால் அவர்கள் வெளியே காண்பித்து கொள்ளாமல் இருக்கலாம் ஆனால் உள்ளே “கொய்யாலே,இவன் சொல்லுறத திரும்பி,இவன் லவ்வுக்கு சொன்னா?நம்மல செருப்ப கலட்டி அடிப்பான்.”பல கெட்ட வார்த்தைகளும் வரும் ஆனா அது வேண்டாம்.அப்பொழுது உங்களுக்கு எப்படி இருக்கும் குளு குளு குச்சி ஐஸ் போல இருக்குமல்லவா.அதை தான் இந்த உலகமே நப்பிக்கிட்டிருக்கு.அதுக்காக இடம் பொருள் ஏவல்னு ஒன்னு இருக்குல?சும்மா இருப்பா நீ,அப்படினா சொன்னா இருக்கு ஆனா இல்லைனு தான் பதில் சொல்ல முடியும்.
   “இந்த உலகம் ஒரு நாடக மேடை அதில் நடித்திடும் நடிகர்கள் நாம்”
இதில் நான் உன்னை பிரிய மாட்டேன்.நானும் உன் உயிர் தோழன்/தோழி/காதலன்/காதலி என்ன நடந்தாலும் உன்னுடனே இருப்பேன் என்று சினிமா வசனம் பேசும் முகுமூடி அனியாத கொள்ளைகாரர்களுக்குப் நூறு சதவீதம் பொருந்தும்.அதை விட்டுவிட்டு,என்ன நல்லதான் பேசிட்டு இருந்தான்/இருந்தாள் ஆனா திடீர்னு பேசலயே அப்புடினு நினைக்காதீங்க!அதான் அவங்களோட உண்மையான தோற்றமே.எப்படியோ உங்களுக்கு இப்பவே தெரிந்ததேனு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.
நீ எங்க வேணும்னாலும் பஞ்சாயத்துக்கு போ,ஆனா தேவையில்லாம மூக்கு உடைஞ்சு வராத.
   இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால்
“எங்குமே உன் உரிமைக்காக மெளனம் காக்காதே,அது உன் தந்தையாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி.”
இங்கு உரிமை என்பது உனுக்குடைய சரியான பாதை.பாதை மாறி பயணம் செய்ய ஆசைபடாதே பிறகு உரிமை என்பதை நீ முற்றிலும் இழப்பாய்.

1 thought on “நானும் ஒரு நடிகனே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *