மழலை(முதல் பகுதி)

Untitled-1

மாலை 4.35 மணி
100/4,ஹௌசிங் பகுதி,உடுமலை.
மழை வர்ற மாதிரி இருக்கு,துணி எல்லாம் எடுத்து உள்ள வை என்றான் சந்திரு.
ஆமாங்க மழை கொட்ட போகுது என்று சடைந்துகொண்டு துணிகளை எடுக்கச் சென்றாள் மல்லிகா.

மாலை 4.40 மணி
ஹௌசிங் பகுதியின் மையம்,
மைதானத்தில்,
டேய் மழை வர்ற மாதிரி இருக்கு என்று கண் சிமிட்டிக்கொண்டே வானைப் பார்த்து சீக்கிரமா பந்த வீசு என்றான் கண்ணன்.
கோகுல் பந்து வீச தனது வலது கையை ஓங்கினான்.

மழை தூற ஆரம்பித்தது,

மாலை 4.45 மணி
13/1,ஹௌசிங் பகுதி
புதிதாக கல்யானமான மகேஷ்,வேலையை முடித்து விட்டு நீச்சல் குளத்தில் குளித்தவாறு நினைந்தபடியே வீட்டுக்கு வந்தான்.பாசமான மனைவி அருணா என்ன மகேஷ் இவ்ளோ வொர்க் ஆ என்று கிண்டலடித்து தலையைத் துவட்டினாள்.

மாலை 4.50 மணி
14/1,ஹௌசிங் பகுதி,உடுமலை
தாத்தா. நியூஸ் சேனலை மாற்றி பார்த்துக்கொண்டிருக்கிறார்.பாட்டி காபி கொண்டு வந்து கையில் தர.ஒரு திருப்தியான புன்னகையுடன் வாங்கி பருகுகிறார்.

மழைக்காக மேகம் சூழ்ந்து இருளத் துவங்கியது.மெல்ல பெய்த மழை,ஊத்தத் துவங்கியது.

மாலை 5 மணி

திடீரென ஒரு துப்பாக்கி சத்தம் அந்த ஹௌசிங் ஏரியாவில் கேட்டது.
அருகில் இருந்த சில வீடுகளுக்கே அந்த சத்தம் கேட்டது.

மிரண்டுபோன அந்த புதுமண தம்பதி பத்து பதினைந்து நிமிடத்தின் வெடவெடப்பில் ஒரு முடிவுக்கு வந்தது.
மழை ஊத்த துவங்கியது.

ஹலோ சார் நான் ஹௌசிங் ஏரியால இருந்து மகேஷ் பேசுறேங்க,இங்க துப்பாக்கி சத்தம் கேட்டிச்சு.ஆமா சார்,ஹௌசிங் தான்.
இப்போதான் சார் ஒரு 10 நிமிஷம் இருக்கும்.
மகேஷ்,மகேஷ் சார் 13/1.
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஓ.கே சார் என்று போனை குழப்பம் கலந்த பயத்துடன் துண்டித்தான்.

மாலை 5.30க்கு
என்னங்க,மழை வேற பெய்யுது.
பையன காணோம்,என்னனு பாருங்களேன் என்று பயத்துடன் கண்ணில் கண்ணீர் நிற்க கேட்டுக்கொண்டாள் மல்லிகா.
டீ குடிப்பதை நிறுத்திவிட்டு மல்லிகாவை முறைத்தவாறு,நீ பயப்படாமே இரு,எங்க போயர போறான் ரவி அண்ணன் வீட்லதான் இருப்பான்.நான் போய் பாக்குறேன் என்று குடையை விரித்து கோபமாய் கிளம்பினார் சந்திரு.

ரவி அண்ணா,தம்பி இருக்கானா?

டேய்,டேய்,சந்திரு வந்திருக்கார் பாரு.
ஏம்மா காபி கொண்டு வா.

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்னா.

உள்ளே இருந்து கிரிக்கெட் விளையாடுவது போல கையை அசைத்துக்கொண்டு வேகமாய் ஓடி வந்தான் பாண்டி.பாண்டியை பார்த்த உடன் உள்ளே ஒரு கலக்கம் ஏற்பட்டது சந்திருவுக்கு.கோகுல் எங்க வீட்டுக்கே வர்லே என்று புழுகினான் கண்ணன்.

எங்கப்பா போனான் அவன்.

தெரிலீங்க என முழித்தான்.

ரவி,டேய் மரியாதையா சொல்லிரு இல்லை என்று கை ஓங்கினார்.
அழுதுகொண்டே அந்த பத்து வயது சிறுவன்,
அவனும் நானும் கிரௌண்டில கிரிக்கெட் விளையாடிக்கிட்டிருந்தோம்,மழை வர்ற மாதிரி இருந்திச்சு அப்பா திட்டுவாங்கனு சொல்லிடு நான் வந்துட்டேன்.

அவன் இன்னும் வரலையே கண்ணா என்று சந்திரு வருத்தப்பட்டார்.
அவன் ஸ்டெம்ப் பேட் எல்லாம் எடுத்திட்டு போறேன்னு சொன்னான்.நான் முன்னாடியே வந்துட்டேன்.எனக்கு ஒன்னும் தெரியாது என்று அழுது ஓவர் ஆக்டிங் செய்தான்.

பயந்து போன சந்திரு ரவியின் துணையோடு கோகுலைத் தேடத் துவங்கினார்கள்.அவன் விளையாட சென்ற இடம்,பள்ளிக்கூடம்,நொறுக்கு தீனி உண்ணும் இடம்,நண்பர்களின் வீடு என்று அனைத்து இடங்களில் தேடியும் இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கண்கிளில் இருந்து தனது கனவை திருடியது போல உணர்ந்த சந்திரு,அண்ணா எனக்கு என்னமோ பயமா இருக்குணா என்று வேதனையில் அழத் துவங்கினான்.ரவியும் பயந்து போக,எங்கிருந்தோ ஒரு தைரியத்தை திரட்டி காவல் நிலையத்திற்கு விரைந்தனர்.

2 thoughts on “மழலை(முதல் பகுதி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *