மழலை (முடிவுப் பகுதி)

Untitled-1

பயந்து போன சந்திரு ரவியின் துணையோடு கோகுலைத் தேடத்  துவங்கினார்கள்.அவன் விளையாட சென்ற இடம்,பள்ளிக்கூடம்,நொறுக்கு தீனி உண்ணும் இடம்,நண்பர்களின் வீடு என்று அனைத்து இடங்களில் தேடியும் இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கண்கிளில் இருந்து தனது கனவை திருடியது போல உணர்ந்த சந்திரு,அண்ணா எனக்கு என்னமோ பயமா இருக்குணா என்று வேதனையில் அழத் துவங்கினான்.ரவியும் பயந்து போக,எங்கிருந்தோ ஒரு தைரியத்தை திரட்டி காவல் நிலையத்திற்கு விரைந்தனர்.

(முதல் பகுதியின் தொடர்ச்சி)

ரவி ஒன்னும் ஆகாது என்று சமாதானம் சொல்ல அதை சந்திரு ஏற்பதாகத்  தெரியவில்லை.அங்கு விரைந்தவர்களுக்கு காத்திருந்தது இன்னொரு அதிர்ச்சி.காவல் நிலையத்தின் எழுத்தர் இன்ஸ்பெக்டரை போனில் தொடர்பு கொண்டு,சார் அதே ஏரியால இருந்து இங்க ஒருத்தர் வந்திருக்காரு என்று தயங்க, அதான்யா போயிட்டு இருக்கேன் என்று பதில் சொன்னார் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்.சார் அது இல்லைங்க இங்க அவரோட பையன காணோம்னு சொல்றாங்க என்று ஒரு முடிச்சு போட்டார்.

வெங்கடேஷ் பார்ப்பதற்கு வாட்டம் சாட்டமாக இருப்பார்.மிகவும் துணிவான ஒரு அதிகாரி.அவரின் போலீஸ் மூளை வேலை செய்யத்  துவங்கியது.

அவுங்க வீட்டு அட்ரெஸ்,பேரு எல்லாம் வாங்கிக்கோ.முடிச்சிட்டு சீக்கிரமா ஹௌசிங் ஏரியாகே வர சொல்லு என்று தனது வழக்கமான அதட்டல் நிறைந்த கம்பீரமான குரலில் சொன்னார்.

மாலை 6.20 மணிக்கு
மழை கணிசமாகக் குறைந்திருந்தது.

மகேஷின் வீட்டு அழைப்புமணி பாடியது “ஓம் ஓம் புவஷ்பவ”.இரண்டு மாடி கட்டிடம் என்பதால் இறங்கி வர சில நேரம் ஆனது மகேஷுக்கு.கதவை திறந்தால் மூன்று போலீஸ்காரர்கள்,இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்,கான்ஸ்டபில் கணேஷ் மற்றும் திலீப் வெறுப்போடும் கடுப்போடும் மழையின் சாரலில் நினைந்தபடியே நின்றிருந்தார்கள்.துணை காவலர்கள் இருவரும் அளவான உயிரமும் கருநிற மேனியும் கொண்ட மொரடனாக இருந்தார்கள்.

ரெயின் கோட்டை அணிந்திருந்த காவலர்களில் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்,
மகேஷ் நீ தானப்பா?என்ன ஆச்சு?என்று பந்தாவாக கேட்க,

சார் உள்ள வாங்க என்று பவ்வியமாய் அழைத்தான் மகேஷ்.

சொல்லுங்க மகேஷ்,எங்க சத்தம் கேட்டுது,எப்போ? என்று வினாவினார்.

சார்,ஒரு அஞ்சு மணி இருக்கும்.தெக்க எங்கயோ பக்கத்துல ஒரு துப்பாக்கி சத்தம் கேட்டுது.என்ன பண்றதுனு தெரில கொஞ்சம் பயமா இருந்திச்சு சார்.

உங்க வீட்ல எத்தன பேரு?

நான்,என் wife,அம்மா,அப்பா,வேலை செயுரவுங்க ரெண்டு பேரு சார்.

நீங்க என்ன பண்றீங்க?

நான் சோழமண்டலம் இன்சூரன்ஸ் கம்பனில H.Rஆ இருக்கேன் சார்.

நான் பாத்திட்டு வந்து மறுபடியும் உங்ககிட்ட பேசுறேன்.

அக்கம் பக்கத்துலயும் விசாரிங்க என்று இரண்டு காவலர்களை அனுப்பிவிட்டு வெளியில் நடந்து வந்தார் வெங்கடேஷ்.காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு அந்த ஆள் வந்தான்லே அவன் அட்ரெஸ மெசேஜ் பண்ணு சீக்கிரம்யா என்று அதட்டினார்.

ரவியும் சந்திருவும் கரு நிற ஸ்ப்ளண்டர் வண்டியில் வந்து இறங்கினார்கள்.

வெங்கடேஷ் சந்திரு வீட்டை நோக்கி நடந்தார்.அங்கிருந்து சிறிது தூரம் இருக்கும் அந்த வீடு என்பதை அவர் அறிந்தவரே.

சந்திரு நீங்கதானே?

ஆமா சார்.என் பயன்தான் காணாம போனது என்று கண்ணை கசக்கினார்.

எப்போ வீட்ல இருந்து போனான்?

எந்த கிரௌண்ட்?எங்க இருக்கு?

என்ன கலர் சட்டை,திரௌசெர்?

உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம்? என்று கேள்விகளில் சதகம் உண்டு செய்தார்.

சிறு மௌன யோசனைக்குப் பிறகு,சார் சந்தேகம்னு யாரும் இல்லை என்றான் சந்திரு.

எத்தனை மணிக்கு உங்க பையன் வீட்டுக்கு வந்தான் ரவி? என்று கேட்டு,வாசலில் இருந்து இரண்டு காவலர்களும் உள்ளே வந்தார்கள்.

வெங்கடேஷ் எழுந்து தனியாக சென்று,

என்னயா ஆச்சு? என்று விசாரித்தார்.

சார் அங்க துப்பாக்கி சத்தம் கேட்டது உண்மைதான்னு பக்கத்துல இருக்குற மூணு வீட்லயும் சொன்னாங்க.

அப்போ அங்க எதாவது கத்துற சத்தம்,வேற எதாவது கேட்டுச்சானு கேட்டாங்களா?

அதெல்லாம் எதுவும் கேக்கலைன்னு சொன்னங்க சார்.

சரி இங்க லோக்கல் ரவுடி ரெக்கார்ட்ஸ்,ரிட்டையர்ட் போலீஸ் அந்த மாதிரி எதாவது இருக்கங்கலானு விசாரிங்க.

சரிங்க சார் நாங்க போறோம்.

ஏற்கனவே மணி எட்டு ஆச்சு,இருந்தாலும் நான் விசாரிக்க சொல்லிருக்கேன்.

நானும் போறேன்,நீங்க ஒன்னும் பயப்படதீங்க.நாங்க பாத்துக்குறோம் என்று வழக்கமான வாக்கியத்தை கூறி தன் குடியிருப்புக்கு சென்றார் வெங்கடேஷ்.

ஒரு மணி நேரம் கழித்து வெங்கடேசின் அலைபேசி ஒலித்தது.சொல்லுயா என்றார்
“சார் இங்க ரிட்டையைர்ட் மிலிடரி காரன் ஆனந்த்னு ஒருத்தன் இருக்கான்.எப்போ பாத்தாலும் குடிச்சிக்கிட்டே தான் இருப்பானாம்.”

சரி,இதுவரைக்கும் துப்பாக்கி எதாச்சும் பார்த்தாங்களா அவன்கிட்ட?

சார் அவன் வீட்டுக்கு உள்ளேயே யாரையும் விட மாட்டானாமா,சரியான சைக்கோனு பேசிக்குறாங்க சார்.

யோவ் அதுக்கு அர்த்தம் தெரியுமாயா அவனுகளுக்கு?லூசுப் பயலுக.

வேற என்னையா?

அந்த பையன் ஒரு தடவை “ball” உள்ள விழுந்திருச்சுன்னு அந்த ஆனந்த்
வீட்டு செவுரு எட்டி குதிச்சிருக்கன் சார்.அப்போ அந்த பையன அவன் இரும்பு பைப்ல அடிச்சிட்டாத சொல்றாங்க சார்.

இதை யாருயா சொன்னா?என்று தனது காரை ஸ்டார்ட் செய்தார் வெங்கடேஷ்.

அவன்கூட படிக்குற பையன் சார்.

சரி,நீ அவன் வீட்ட வாட்ச் பண்ணு நான் வந்துட்டே இருக்கேன் என்று அழைப்பை துண்டித்தான்.

சார்,ஒரு கருப்பு கலர் போலோ கார் உள்ள போகுது சார்.

இருயா வந்திடறேன்.ஆமா அவன் வீடு எங்க இருக்குனு சொன்ன?

சார் நம்ம முதல்ல போனோம்ல அவுங்க வீட்டுக்கு பின்னாடி நாலாவது வீடு சார்.

ம்ம்ம்.பக்கத்துல எதாவது கிரௌண்ட் இருக்கா?

ஆமா சார் ஒரு சின்ன கிரௌண்ட்.

சரி அவன கவனமா  வாட்ச் பண்ணு,நான் ஒரு 15 மினிட்ஸ்ல வந்திடறேன்.

கார் ஓட்டியபடியே விசாரணையில் கிடைத்த புள்ளிகளை கோர்க்க முயற்சி செய்தான்.
“அஞ்சு மணிக்கு கன் ஷாட்”
“கிட்ட தட்ட அதே டைம்ல ரவி பையன் வீட்டுக்கு போயிருக்கான்”
“அதே கிரௌண்ட்”
“அல்ரெடி ஒரு ப்ராப்லம் இருக்கு”
“அந்த பையன கொன்றுக்கணும்”
“பொணத்த எங்க மறைச்சி வைக்குரதுன்னு தெரியாம எங்கயோ  போய்ட்டு வந்திருக்கான்”
“அவன் தான்” என்று நினைக்கே வந்தது அந்த மைதானம்.

தெருவின் ரோட்டை ஒட்டிய மைதானம் என்பதால் தெரு விளக்கு வெளிச்சம் ஓரளவு தெரிந்தது.
ஸ்டம்ப் குத்திய இடமும்,ஷு தாரைகளும் நன்றாக தெரிந்தது.
அவரால் எந்த இடத்தில் விளையாடினார்கள் என்பதை யூகிக்க முடிந்ததது.

ரோட்டைக் கடந்தால் ஒரு பெரிய சுவர் இருந்தது.இதுதான் அவனின் வீட்டின் பின்புறமாக இருக்க வேண்டும் என்பதை யூகித்து விட்டார்.அந்த சுவரின் அகலம் சுமார் எண்பது அடி இருக்கும்.உயரம் சுமார் இருபது அடி இருக்கும்.மழையின் சேற்றில் அச்சிறுவனின் ஷு அச்சைத் தேடி அலைந்தார் வெங்கடேஷ்.அந்த எண்பது அடி சுவறு முடியும் ஒரு இடத்தில் உயரமுள்ள கல் போடப்பட்டிருந்ததை கவனித்தார்.அந்த கல்லில் ஏறி நின்று குதிக்க முடியுமா என்று கணித்தார்.அதன் அருகே தனது அலைபேசியின் டார்ச் லைட்டை அடித்தார்.ஆங்கங்கே இருந்த சேறுகளில் தென்பட்டது அதே அச்சு.

அதை ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு காரில் ஏறி கிளம்பிவிட்டார்.தனது உயர் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவிக்க,நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இரண்டில் ஒரு காவலர்களையும் அழைத்து,
யோவ் திலீப்,ஸ்டேஷன் போய் வாரென்ட் faxல வந்திருக்கும் வாங்கிட்டு,அந்த பைத்தியகாரன் வீட்டுக்கு வந்திரு.நான் இப்போ அஞ்சு நிமிஷத்துல வந்திட்றேன் கணேஷ அங்கயே இருக்க சொல்லு.

மீண்டும் சிந்தனை துவங்கியது வெங்கடேசுக்கு,
இங்க இருந்து சுத்து வட்டாரத்துல ரெண்டு குளம்,ஒரு டேம் இருக்கு.அதோட யாருமே அதிகமா நடமாடாத இடம் அப்புடினா? ஒரே இடம் மட்டும் தான் இருக்கு.
ஒரு வேலை அவன் வீட்லயே புதைச்சிருந்தா?
இருக்காது அப்படி இருந்தா,கார் ஏன் அந்த நேரத்துல வெளிய போய்ட்டு வருது?
Heartless bastard.என்ன பன்னுனான்னே தெரியலயே?என்று சந்தேகத்தை எண்ணிய நொடிகளில் இடம் சேர்ந்தார் வெங்கடேஷ்.

ஒரு பல்சர் பைக்கை வெளிச்சம் படாத இருட்டில் நிறுத்திவிட்டு தானும் நின்றிருந்தான் கணேஷ்.

யோவ் என்னைய மொபைல் நோண்டிட்டு இருக்க,இது சீரியஸான விஷயம்.

சாரி சார்.

சரி,எதாவது ஆள் நடமாட்டம் இருந்திச்சா?

அதெல்லாம் ஒன்னும் இல்லை சார்,ஒரே ஆள் தான்.அப்பப்போ வெளில வந்து பாத்திட்டு போறான்.

யோவ் என்னையா சொல்றே,உன்னை பாத்துட்டானா?

இல்லை சார் என்று தலைகுணிய,ஒரு ஆட்டோவின் சத்தம் கேட்டு இருவரும் யாராக இருப்பார்கள்  என்ற துடிப்பில் கூர்மையான கண்களால் சாலையை பார்த்தார்கள்,ஆனால் பயப்படும்படி எதுவும் இல்லாமல் வந்தான் திலீப்.

மூவரும் ஆனதின் வீட்டினுள்ளே சென்றார்கள்.அங்கு நின்றுகொண்டிருந்த கருப்பு போலோ காரை நோட்டமிட்டார் வெங்கடேஷ்.மழையில் நினையாமல் பளிச்சென்று இருந்தது அந்த போலோ கார்.

கார் மழை நின்ற பிறகு தான் சென்றிருக்கிறது என்பதை அறிந்துகொண்டார்  வெங்கடேஷ்.

கதவருகே இருந்த அழைப்பு மணியை அடித்தான் திலீப்.அருகில் இருந்த ஜன்னலில் இருந்து பார்த்து விட்டு வருகிறேன் என்று சைகை காண்பித்துவிட்டு,ஒரு சிறிய நேரம் கழித்து திறந்தது அந்த கதவு.

அவன் கையில் இருந்த அந்த துப்பாக்கியை கவனித்தார் வெங்கடேஷ்.

Down,down… என்று சத்தமிட,ஆனந்தின் ஒரு புல்லெட் திலீப்பின் கையில் பாய்ந்தது.

மறுமுனையில் வெங்கடேஷின் தோட்டா அவனின் துப்பாக்கி பிடித்திருக்கும் உள்ளங்கையை நோக்கி பாய்ந்தது.

அவன் என் தனிமையை கெடுத்ததாகவும்,உளவு பார்த்ததாகவும்,என் மனநிலையை சொதித்ததால் ஆத்திரமாடைந்த தான் அவனை சுட்டதாகவும் வாக்குமூலம் அழித்தான் ஆனந்த்.

அடுத்த நாள் காலையில்,ஒரு விளையாட்டு பூங்காவில் கோகுலின் உடல் கண்டெடுக்கப்பட்டது.அந்த மழலை சிறுவனின் கால்களிலும் மார்பிலும் தோட்டாக்கள் கண்டறியப்பட்டது.அதை கண்ட கோகுலின் பெற்றோர்கள் கதறி அழுதார்கள்.உடனிருந்த அனைவரின் இதயமும் கனத்தது.கண்ணனின் கண்களில் கோகுலின் கடைசி தருணம் வந்து வந்து போனது.

4 thoughts on “மழலை (முடிவுப் பகுதி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *