விதைப்பதை மறக்காதே!

மேலே இணைக்கப்பட்ட வீடியோ லிங்க் ஒரு பிரபலமான யூடுபருடையது.அதில் என்ன விசேஷம் என்றால் அவர் அமர்ந்துகொண்டு வேலை செய்வதில் நாட்டமில்லாதவர்.அதனால் அவர் ஒரு த்ரியட்மில்(TREADMILL) வாங்கி தனது எழுதும் நேரத்தில் உபயோகிக்கிறார்.நாட்கள் நகர்கிறது அதன் உபயோகமும் குறைகிறது.அவர் கடைசியாக த்ரியட்மில்(TREADMILL) உபயோகித்து ஆறு மாதங்கள் ஆகிறது என்பதை வருத்தத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.அவர் தனது முயற்சியை பாராட்டிய ஒருவரை பற்றியும் மகிழ்ச்சியாய் தெரிவிக்கிறார்.சரி இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்பது பலரின் கேள்வியாக இருக்கலாம்,அவர் நான் தொடர்ந்து கவனிக்கின்றே ஓர் யூடுபர்(YOU TUBER).அவர் இதனை கைவிடுவதை மகிழ்ச்சியாய் கூறுகிறார்.எனக்கும் இதுபோன்று தான் வாழ்க்கையில்.

வாழ்க்கைதன்னைசுழற்றிவீசும்போழுதுசுழன்றுவிடக்கூடாதுஎன்பதேஎன்நோக்கம்

இந்த ப்ளாக்(BLOG) ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றது.ஆரம்பத்தில் சில கவிதைகளை தொட்டு துவங்கி வைத்தாலும் எத்தனை நாட்கள் கவிதைகளால் மக்களை சென்றடைய முடியும் என்றே யோசித்து,தன்னை சுற்றி நடக்கும் சில கேலியான சம்பவங்களை பதிவிட்டேன்.பிறகு நீண்ட நாள் யோசனை இன்றி கைபேசியில் தூக்கம் இல்லாமல் சில சிறு கதைகளை எனக்கு பிடித்தவாரு எழுதினேன்.இவை அனைத்தையும் என் மனதிற்கு பிடித்தே முழு திருப்தியாய் எழுதிய பதிவுகள்.

மீண்டும் ஒரு இடைவேளை விழுந்துவிட்டது.காரணம் நான் சோம்பேறிதான்,அனால் என்றாவது ஒரு நாளில் தனது கம்போர்டை(COMFORT) விட்டு வெளியே வருவேன் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை உடைய ஒரு சோம்பேறி.இந்த நம்பிக்கையை தாண்டி நான் செய்த செலவுகளையும் தாண்டி இந்த ப்ளாக் என்ற ஒன்றை நிறுத்திவிடலாமா என்ற எண்ணம் மெதுவாக ஓட துவங்கியது.ஆனால் நான் இதனை துவங்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.எந்த ஒரு பெரிய காரியத்தையும் சுலபமாய் முடிக்க முடியாது,அப்படியே முடித்தாலும் அது பெரிதாய் நிலைக்காது.

எனக்கு ப்ளாக் என்று ஒரு வசதி இருப்பதே திரு.ராஜேஷ்(karundhel.com) அவர்களின் அருமையான பதிவுகளை பார்த்து தான் தெரிந்தது.1.கடினஉழைப்பும்நம்பிக்கையும்இருந்தால்நிச்சயம்ஒருநாள்சாதிக்கலாம்.2.சாதிப்பதற்குவயதுதேவைஇல்லை.3.மயக்கமானஇவ்வுலகில்மயங்கியமூடனாய்வாழ்ந்துவிடாதே.4.உன்பாதையும்,உன்லட்சியமும்நேராகஇருந்தால்மனதாரபாடுபடுவெற்றிஉன்வசம்.5.இவைஅனைத்தையும்விடமுக்கியமானவைஉன்னைநம்பு.இவை அனைத்தும் நான் கடந்து வந்த பாதைகள்.மறக்க நினைக்கறேன் பாதையை மட்டுமல்ல வாழ்கையையும் தான் என்பது நினைவில் வந்தது.மீண்டும் முயற்சிக்கிறேன் புதிதாய்.எழுத ஆசைபடுகிறேன் எண்ணம்போல்.நான் இன்று வேண்டுமானால் தோற்றிருக்கலாம் அனால் என்றாவது ஒரு நாள் ஆசைப்பட்ட வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்து விடுவேன் என்ற நம்பிக்கையில்……………..உங்களைபோல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *