12912860_1605718849751430_1429520932_n

கனவெல்லாம் உறங்கிவிட கல்லறைக்குள் நான்மட்டும்

அசைவின்றி கிடக்கிறேன் அடிபட்ட பாம்பாய்

எழுந்துவாவென்று அழைக்க ஆளில்லையே அப்பொழுதும்.

கனவெல்லாம் மக்கிவிட ஓரிடத்தில் நான்மட்டும்

கண்மூடி கிடக்கிறேன் ஆழ்ந்த சிந்தனையில்

வளர்த்ததும் வெட்டிவிட்டு கண்ணீர்விடுகிறயே இப்பொழுதும்.

நினைவில்லாமல் கிடந்தாலும் கனவில்லாமல் இல்லை

எழுந்துவிடும் என் முதுகெழும்பு சீற்றமாய்

உண்மையான ஆசைக்கு கரங்களுண்டு முற்போழுதும்.

ஆசை மட்டும்தான் மனிதனை வாழவைக்கிறது

 

ஆசைக்கான போராட்டத்தில் தளராமல் போராடினால்

கல்லறையும் உடைந்துவிடும் தீப்பந்தமாய் எப்பொழுதும்.

எழுந்துவிட்டு கூறுகிறேன் எழுதிவிடு என் கல்லறையில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *