தம்பி,,,,,,

நானும் என் நண்பர்களும் வழக்கமாக ஒரு கடையின் முன் அமர்ந்து பேசுவோம்.அப்படி பேசும்போது ஒரு சத்தம் திரும்பி பார்த்தா ஒரு பைக்கில் ஒருவர் அமர்ந்து ஏதோ பேசிகொண்டிருந்தார்.யாரை பார்த்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்தல் ரோட்டில் ஒருவர் கீழே கிடக்கிறார்.அவரோ எந்திரிக்க கூட முடியாத அளவுக்கு போதையில் உள்ளார்.கஷ்டப்பட்டு அவரை தூக்கி விட்டு பைக்கில் அமர்த்திவிட்டு அந்த நபர் சென்று விட்டார்.மெல்ல அசைந்து அசைந்து நாங்கள் இருக்கும் இடத்திற்கு ஒரு வழியாக வந்துவிட்டார்.சிறிது நேரம் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.தேடிமுடித்தவுடன் என் […]

ஜாக்கிரதை!

நேற்று எனது ஊரில் ஒரு விபத்து.அந்த விபத்து நடந்த இடம் என் பணியிடத்தை விட சிறிது தூரம்.முதலில் ஒரு ஆம்புலன்ஸ் சென்றது(government ambulance).இரண்டாவது ஒரு ஆம்புலன்ஸ்(private) அதன் பின் ஒரு பத்து அடி தூரத்தில் சென்றது.பின்னே சென்ற ஆம்புலன்ஸ் மடமடவென முன்னே செல்லும் அம்புலன்சை முந்தி அங்கு உள்ள அனைவரையும் பயம்படுத்தியபடி நின்றது. அங்கு உள்ள அந்த விபத்துக்குலானவரை தூக்கி சென்றது.இதில் பலரும் பேசுவது என்னவென்றால் எதற்காக இவர்களுக்குள் இவ்வளவு போட்டி.ஒரு வேலை பேசி வைத்து வந்திருப்பார்களோ […]

A reference to the first time short film makers

தனது வாழ்க்கையே ஒரு சினிமா துறைதான் என்று எண்ணுபவர்களுக்கும் பொழுதுபோக்குக்காக குறும்படம் எடுக்க நினைக்கும் நண்பர்களுக்கு யூடுப் ஒரு சிறந்த பாட புத்தகம்.அதில் சிறப்பான தகவல்களை அழிக்கும் ஒரு சில சேனல்கள் பற்றிய சிறு குறிப்பு…. Andyax-https://www.youtube.com/channel/UCSP7E88uFuHASIJLDjAhy Roberto Blake-https://www.youtube.com/channel/UCovtFObhY9NypXcyHxAS7-Q D4Darious-https://www.youtube.com/channel/UCYaIdC5pbkpECxXLjf0Lzaw DSLRguide-https://www.youtube.com/channel/UCzQ1L-wzA_1qmLf49ey9iTQ Indy Mogul-https://www.youtube.com/channel/UCGZ0LgTmAJn9Banetdr_ZFg Film Riot-https://www.youtube.com/channel/UC6P24bhhCmMPOcujA9PKPTA Videomaker-https://www.youtube.com/channel/UCsRd7WVROeTytsoKddoYVFg Cinecom.net-https://www.youtube.com/channel/UCpLfM1_MIcIQ3jweRT19LVw Flyfilms-https://www.youtube.com/channel/UC981WPDEXXp-rAAy8oF0FTA thefrugalfilmmaker-https://www.youtube.com/channel/UCvsCvArJ8fI73NeKAOJKbyA இதில் வரும் தகவல்கள் நமக்கு உபயோகமாக இருக்கும்.இதில் கதை எழுதுவதில் ஆரம்பித்து எடிட்டிங் வரை தேவையான தகவல்கள் உள்ளது.     […]

உயிராய் நீ

தவழ்ந்தது நானெனில்! தரைதவழச் செய்தது நீயகட்டும். பண்பானவன் நானெனில்! பழகச் செய்தது நீயகட்டும். சிரிப்பவன் நானெனில்! என்மலர்களின் வேர்கள் நீயகட்டும். உயர்பவன் நானெனில்! உழைப்பின் உதாரணம் நீயகட்டும். வாழ்பவன் நானெனில்! இவ்வாழ்க்கை முழுதும் உனதாகட்டும்.

“For the sake of your life”

யார் இந்த லி.டிகாப்ரியோ “ஒரு நடிகன் தானே?” “ஆஸ்கர் விருதுக்காக போராடியவர் தானே?” “கனவுப் படம் நடிச்சவர்தான?” இவை அனைத்தையும் விட டிகாப்ரியோ ஒரு சமூகவாதி என்பதை ஆஸ்கர் விழாவில் அவர் வெளிப்படுத்தியது அனைவரின் நினைவிலும் இருக்க வேண்டும்.அப்படி என்ன சொன்னார் அந்த மனுஷன் என்று கேட்டால் பூமி வெப்பமயமாவதால் அதனை சரி செய்ய மக்கள் முன்வரவேண்டும் என்பதே.       ரொம்ப நேரமா அது இதுனு பேசரீங்களே எனக்கு ஒன்னுமே புரியலயே???   இனி புரியம்.பூமி வெப்பமயமாவதால்(Heat) […]

The so called cinematic life!

பரபரப்பான வாழ்க்கையில் தனக்காக ஓட வேண்டிய கட்டாயத்தில் சினிமா எனப்படும் கண்காட்சியில் மயங்கி விழுவது வாடிக்கையாகிவிட்டது.எனக்கு வயது ஒரு பண்ணிரெண்டிருக்கும் அப்பொழுது ஒரு நிகழ்வைக் கேள்விப்படுகிறேன்.அது என்னவென்றால் ஒரு சிறுவனை சில பேர் கடத்தி கொண்டு போய்விட்டனர்.அவனை அடித்த அடியில் இரத்தம் வழிய மயங்கிய சிறுவன் இறந்துவிட அதை புதைக்கிறார்கள் கொலைகாரர்கள்.இவை அனைத்தையும் மறைக்க மிளகாய் பொடி தூவி மோப்ப நாய்களை திசை திருப்ப முயல்கிறார்கள் அந்த திருடர்கள்.என்னடா பட கதைய உள்டா அடிக்கிறானா?என்று எண்ண வேண்டாம் […]

கவனம்

இந்தியா என்னும் பெருங்கடலில் இறந்துபோகும் உயிர்களின் கணிப்பு எண்ணிக்கையை எவரேனும் அறிவதுண்டா?இவ்வுயிரைக் கண்கானிக்க இறந்தவர்களின் காரணச்சாவு பற்றி அறிவதுண்டா? “பத்து தடவை கீழ விழுந்தாதான் சைக்கில் கத்துக்க முடியும்” அப்போ பத்து தடவை விழுந்த உடனே நான் போர்க்கு தயாரானு கேட்டா என்ன பண்ண முடியும்.சரி வல வல கொழ கொழனு பேசாம விஷயத்துக்கு வர்றேன்.சமீபத்தில் நம்ம டீ கடை பெஞ்ச்ல(கூகுள்) உக்காந்து பேசீட்டு இருந்த போது 2014ல நடந்த விபத்துகள் பற்றின ஒரு சிறு புள்ளி […]

மையம் கொண்டதோ!

ஒளிர்விடும் கண்ணிலே மழை ஊஞ்சல் ஆடுவதோ, மனம்கொண்ட வழியிலே உயிரதைக் கொண்டு சேற்குமோ! கற்பதை விழுதாக கைவிசிறி இதயமதை வசப்படுத்து, வலைதனில் சிக்காதிருப்ப வான்கொண்டதோ ஒரு மேகம்! புயல் கொண்ட பூமுகமே இகழாதிருப்ப வாழ்கொண்டுவா, புதிய அகழ்தனில் அறியதோர் வால் வீசு!

ஆசை என்னும் பட்டாம்பூச்சி!

ஒரு சிறுவனின் கால்கள் தெரிகிறது(அதனை சுற்றி பல சிறுவர்களின் ஷூக்கள் அணிந்த கால்கள் தெரிகிறது)இவற்றின் நடுவில்  அவனின் செருப்பு தொய்ந்துள்ளதைக் காண முடிகிறது.அப்படியே நடந்து சென்று ஒரு சுவரில் சாய்ந்து அமர்கிறான்,முகத்தில் வேறு எந்த வித சலனமும் இல்லாமல் தொய்ந்து போன தன் செருப்பை சரி செய்ய முயல்கிறான் ஆனால் முடியவில்லை.அவனின் அந்த ஏக்கத்துடன் கூடிய சோகப் பார்வை ஒரு சிறுவனின் கால்களுக்கு செல்கிறது,அங்கே தன் ஷூவை பலபலக்க அவன் துடைத்து கொண்டே நகர்கிறான்.இறுதியில் அங்கு ரயில் […]