“For the sake of your life”

image

யார் இந்த லி.டிகாப்ரியோ
“ஒரு நடிகன் தானே?”
“ஆஸ்கர் விருதுக்காக போராடியவர் தானே?”
“கனவுப் படம் நடிச்சவர்தான?”
இவை அனைத்தையும் விட டிகாப்ரியோ ஒரு சமூகவாதி என்பதை ஆஸ்கர் விழாவில் அவர் வெளிப்படுத்தியது அனைவரின் நினைவிலும் இருக்க வேண்டும்.அப்படி என்ன சொன்னார் அந்த மனுஷன் என்று கேட்டால் பூமி வெப்பமயமாவதால் அதனை சரி செய்ய மக்கள் முன்வரவேண்டும் என்பதே.
      ரொம்ப நேரமா அது இதுனு பேசரீங்களே எனக்கு ஒன்னுமே புரியலயே???
  இனி புரியம்.பூமி வெப்பமயமாவதால்(Heat) என்னவாகும் என்றால் கடல் நீரின் மட்டம் அதிகமாகும்,பாலைவனம் அதிகமாகும்,சரியான உணவு உற்பத்தியாகாது,பருவச் சூழல் மாறிவிடும்.இவை அனைத்தும் நடப்பதால்தான் நாம் இன்று “சூரியன் ஈஸ் கொளுத்திங் வேர்த்து கொட்டிங்”னு பேசீட்டு இருக்கோம்.அதுவுமில்லாம சென்னை வெள்ளத்துக்கே இதுதான் காரணம்னு நினைக்கிறது அரசு.

image

    அப்படி எதனால் பூமி சூடாகிறது என்றால் carbon dioxode எனப்படும் வாயுவை நாம் அதிகம் வெளியிடுவதால் தான்.பிறகு எப்படி சுவாசிக்க முடியும்?
விலங்குகள் பாவம் அல்லவா?
செடிகள் உயிர்க்க வேண்டுமே! என்றால் உண்மைதான் இயற்கையின் விதியும் அதுவே அதை மாற்ற இயலாது.ஆனால் இந்த carbon dioxide வாயுவை குறைக்க நாம் எரிபொருளைக் குறைக்க வேண்டும்.மேலும் மரங்களை வெட்டுவதால் carbon dioxide வாயு காற்றிலிருந்து மிகக் குறைவாகவே எடுக்கப்படுகிறது. எரிபொருளாகிய நிலக்கரி(coal) மற்றும் ஆயில்(oil) ஆகியவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.இந்த வாயுவை greenhouse gas என்கிறார்கள்.இதனைக் குறைக்க உலக நாடுகள் சில kyoto protocol( The Kyoto Protocol is an international agreement linked to the United Nations Framework Convention on Climate Change, which commits its Parties by setting internationally binding emission reduction targets)என்ற திட்டத்தை பின்பற்றுகிறது.
ஆனால் சீனா மற்றும் இந்தியா இதனை பெரிதாக பின்பற்றுவதில்லை.ஆனால் அமெரிக்கா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இதனை பின்பற்றுவது சாத்தியமாகியுள்ளது.இவை அனைத்தின் விளைவுதான் வெய்யில் கொளுத்துகிறது,மழை தட்டுகிறது,குளிர் வாட்டுகிறது என்பதை நாம் உணர்கிறோம்.நம் பூமியைப் பாதுகாக்கத்தான் டிகாப்ரியோ போன்ற சிலர் முயற்சிக்கின்றனர்.இதற்காகத்தான் அவர் பெயரிலே இதற்கென ஒரு தனி நிறுவனத்தை நிறுவியுள்ளார்.அவர் தனது இருபத்தி நான்காவது வயதிலே இதனை துவங்கிவிட்டார் என்பது எனக்கு ஆச்சரியமே.
  நாமும் நம்மால் முடிந்ததை செய்யாவிடில் நம் குழந்தைகள் நம் பேரன்/பேத்தி இவை ஏன்,நம் வம்சமே இறுதியில் முடிந்துவிடும் என்பதில் எந்த ஒரு மாற்றமுமில்லை.
“வருமுன் காப்போம்”
பாதி வந்துவிட்டது இனி மீதம் இருக்கும் நன்மையைக் காக்காவிட்டால் முடிந்துபோகும் இந்த பூலோகம்.

image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *