Latest post

ஒற்றை வண்ணம்

நீயும் நீல வானில் நிலவெடுக்க, அதிர்ந்து போனதடி என் உலகம்! கரை சிந்திய படலமாய் மோடமிட்டாய், இடி தாக்கி இருண்டதடி எனதுலகம்! என் காடெங்கும் பற்றி எரியுதடி, கண்ணீர் கொண்டு அணைக்க ஆளில்லையே! என்று கவிதையாய் கலைந்த கனவில் இருந்து விழித்தான் விக்ரம்.கனவை நினைத்ததும் தாரையாய்க் கொட்டியது கண்ணீர்.வேகமாய் கண்களை தேய்த்துக் கொண்டு எழுந்து நின்றவன்,கண்ணாடி முன் சென்றதும் கவலையின் படலம் அவனின் தாடியிலும் தலை முடியிலும் தெரிந்தது.பிச்சைக்காரன் போல இருந்த அவன்,தனது கோலத்தை சரி செய்ய […]

உறங்காமல் நான் வாழ,

பனி மேகம் என்னை சூழ்ந்து அழகாய் மிதக்கச் செய்தாயோ!  வழி எங்கும் மரத்தில் பூக்க  கொட்டும் மழையாய்  பொழிந்தாயோ! மஞ்சள் நிலவெடுத்து மாலையை மகிழ்வாக்கி என் உலகினைக் குளிர்ந்தாயோ! இருளுக்கு ஒளியாய் உன் கண்களே உறங்காமல் என்னை வாழச்செய்தாயோ! 

Lost from a path of dream

ஒரு சிறுவன் தன் வேலையை செய்யவில்லை என்றால் அடித்தால் சரி ஆகிவிடுமா?  தவறு செய்தால் ஊர் முழுவதும் சொல்லி திட்டி தீர்த்தால் சீராகிவிடுமா? தட்டிக்கொடுப்பதை பலரும் மறப்பதால் தான் இன்று எத்தனையோ பேர் தான் செய்யும் வேலையை நன்றாக உணராமல் இதுதான் விதி என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இதை நான் எதற்காக கருத்து கந்தசாமி போல் கூறினேன் என்றால் என் நினைவில் இருக்கும் ஒரு சம்பவம்தான். காலை 6 மணிக்கு மைதனித்திற்கு போய்விடுவோம் நானும் என் நண்பரும்.அப்படி போகும்பொழுது […]

அழகான ஒரு பயணம்

இந்த காலத்துல நமக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவா கிடைக்குது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.இதன் காரணத்தால் பலரை போல் எனக்கும் கண் கண்ணாடி போட நேரிட்டது.அது ஒரு பங்கு சந்தை மாதிரி அப்பப்போ பவர் குறையும் அப்பப்போ ஏறும்.இதனை சரி செய்ய பாண்டிச்சேரியில் அரவிந்தர்(ஆரோபிந்தோ) என்ற இடத்தில் கண் பயிற்சி கற்று கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து நானும் என் நண்பனும்(அவரின் உறவினர்கள் இருவரும் கிளம்பினோம்).சென்னை கூட செல்லாத எனக்கு இது ஒரு மறக்க முடியாத பயணமாய் அமைந்தது.முன் […]