The so called cinematic life!

image

பரபரப்பான வாழ்க்கையில் தனக்காக ஓட வேண்டிய கட்டாயத்தில் சினிமா எனப்படும் கண்காட்சியில் மயங்கி விழுவது வாடிக்கையாகிவிட்டது.எனக்கு வயது ஒரு பண்ணிரெண்டிருக்கும் அப்பொழுது ஒரு நிகழ்வைக் கேள்விப்படுகிறேன்.அது என்னவென்றால் ஒரு சிறுவனை சில பேர் கடத்தி கொண்டு போய்விட்டனர்.அவனை அடித்த அடியில் இரத்தம் வழிய மயங்கிய சிறுவன் இறந்துவிட அதை புதைக்கிறார்கள் கொலைகாரர்கள்.இவை அனைத்தையும் மறைக்க மிளகாய் பொடி தூவி மோப்ப நாய்களை திசை திருப்ப முயல்கிறார்கள் அந்த திருடர்கள்.என்னடா பட கதைய உள்டா அடிக்கிறானா?என்று எண்ண வேண்டாம் இவை அனைத்தும் உண்மையே.ஆகட்டும் இவையின் இறுதியை எங்கேயோ பார்த்தது போல் உள்ளதா?அது வேறு எங்குமில்லை கில்லி படத்தில்தான்.என்ன ஒரு சிறிய வித்தியாசம் இறுதியில் சிக்கிக் கொண்டார்கள் அந்த கடத்தல்காரர்கள்.இதில் வெட்கபட வேண்டிய விஷயம் என்ன என்றால் கடத்தல்காரர்களும் சிறுவர்களே.
மற்றொரு உதாரணம் நூறாவது நாள் படம் பார்த்த ஒருவன் அதன் பாதிப்பினால் அதை போன்றே கொலை செய்தானாம்.
இன்னொரு உதாரணம் சுமார் மூன்று வருடத்திற்கு முன்பு நடந்தது இந்த சம்பவம் டஅதில் டிராபிக் போலீஸ் ஒருவரை டிரபிக்கிலேயே கத்தியால் குத்திவிட்டுத் திரும்பி வரும் அந்த நடை பாவனை அனைத்துமே ஆலவந்தானில் கமல் நடந்து வந்தது போல் இருந்தது.இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் செக்ஸ் முதற்கொண்டு அப்யூஸ் உட்பட கொலை கொள்ளை புகை பிடிப்பது மது அருந்துவது போன்ற தன்னிலமையை மறக்கும் ஒரு போதையாக இந்த சினிமா பார்க்கப்படுகிறது.நான் சினமாகாரர்களை பெரிதாகக் குறை கூறவில்லை காரணம் அவர்களின் வேலையாகவே இந்த பொழுதுபோக்கான சினிமா  மாறியதற்கு முக்கிய காரணம் நாம்தான்.முறையே கூற வேண்டும் என்றால் கடவுளைப் போன்று ஒப்பிடப்படும்        “நடிகர்களை தவறாக உருவாக்கியது யார்? நடிகைகளுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று பேசியது யார்? மசாலா படங்களை அதிகமாக வரவேற்பது யார்?
நடிகர்களின்/நடிகைகளின் பெயர்களையே சொல்லி தன் குழந்தையின் பெயரைக் கூட ஒரு நடிகரின்/நடிகையின் பெயராக சூட்டியது யார்?நடிகர்/நடிகை களுகாக சங்கம் கொண்டுவந்தது யார்?ஒரு நடிகையிடம் நடிப்பைத் தவிற வேறு விஷயங்களை ரசித்தது யார்?சூப்பர் ஸ்டார்,உலக நாயகன்,இளைய தளபதி போன்ற பட்டங்களை ஏற்றுக்கொண்டது யார்?ஒரேயொரு எம்.ஜி.ஆர்-க்காக இன்று வரை ஓட்டுப்போடுவது யார்?இன்று வரை ரஜினியை அரசியலுக்கு அழைப்பது யார்?சினிமா கிசு கிசுக்களை வரவேற்பது யார்?ஆயிரக்கணக்கில் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் செலவிடாமல் கட் அவுட்டும் அதற்கு பால் அபிஷேகமும் செய்வது யார்?
இன்னும் ஆயிரம் கேள்விகள் உங்களுக்கு தோன்றும் அவை அனைத்துக்கும் ஏனியே நாம்தான்.எனக்கு தெரிந்து நடந்த ஒரேயொரு நல்ல விஷயம் இந்த நட்சத்திர கிரிக்கட்டை ஆதரிக்காமல் இருந்ததுதான்.மூட நம்பிக்கையைப் போல் இது அந்த காலத்தில் இருந்தே பின்பற்றபட்ட ஒரு கலாச்சாரம் போலாகிவிட்டது.விளம்பரம் தேடும் நடிகர்களும் உண்டு விளம்பரமே வேண்டாம் என்று நினைக்கும் நடிகர்களும் உண்டு,அதற்கு உதாரணம் தேவையில்லை.நல்லது செய்தால் ஆதரிப்பதும் கெட்டது செய்தால் எதிர்ப்பதும் நடிகர்களுக்கு மட்டுமில்லை நமக்கும்தான்.நம் வாழ்க்கையை நம்மைவிட வேறு யாராலும் நன்றாகப் பார்த்துக் கொள்ளமுடியாது.படம் என்பது நமக்குள் இருக்கும் தேவையில்லா விஷயங்களை வெளிக்கொண்டு வரும் என்பதை மறந்துவிட்டு நம் கண்ணோட்டமே அனைத்து காரியங்களுக்கும் முன்னோடி என்பதை உணர வேண்டும்.சினிமாவில் நடிப்பதும் நம்மைப் போன்ற மனிதர்கள் என்றும் சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.இவை மற்ற துரையில் சண்டையிடுபவர்களுக்கும் பொருந்தும்.
இதை புரிந்து கொள்ளாமல் கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர்களுக்காக நம் சம்பாத்தியத்தை விட்டுவிட்டு எதற்காக சண்டை போட வேண்டும்.நீயா நானா என்று சண்டையிடும் வாழ்க்கையில் நடிகர்களுக்காக சண்டையிடுவது சரியல்ல.விஜயகாந்த் பத்திரிக்கைகாரர்களை அடிக்க வருகிறாரா?தவராக பேசுகிறாரா?
என்பதையெல்லாம் விட்டுவிட்டு நமக்கு ஏன் இந்த நிலமை என்பதை சிந்தித்துப் பாருங்கள்.இவை அனைத்தையும் இனி வருங்காலத்தில் மாற்ற வேண்டும் என்றால் தன் குழந்தைகளுக்கு படங்கள் பற்றியும் அதன் வெளிச்சம் பற்றியும் கூறி வளர்க்க வேண்டும்.

4 thoughts on “The so called cinematic life!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *